Top posting users this month
No user |
Similar topics
இந்திய இழுவைப் படகுகளால் மட்டுமல்ல யாழ், மன்னார் மீனவர்களாலும் தொல்லை: வலைப்பாடு மீனவர்கள்
Page 1 of 1

இந்திய இழுவைப் படகுகளால் மட்டுமல்ல இலங்கை இழுவைப் படகுகளாலும் தொழிலை இழந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் வாழ்வை மீட்டுக்கொடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர் கிளிநொச்சி- வலைப்பாடு பகுதி கடற்றொழிலாளர்கள்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போதே வலைப்பாடு பகுதி கடற்றொழிலாளர்கள் முதலமைச்சரிடம் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இழுவைப் படகுகள் எமது பகுதிகளில் அத்துமீறி அனைத்து வழங்களையும் அழித்து வருவதால் கடற்றொழில் முற்றாகச் சீரழிந்துள்ளது. கடற்றொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.
தொழிலை இழந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் எங்களையும் கவனத்தில் எடுங்கள். இல்லையெனில் எங்களை சிறைகளில் தள்ளுங்கள். அல்லது வேறு தொழிலைச் செய்யக் கற்றுக்கொடுங்கள் எனவும் அவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். எங்கள் பகுதியில் 356 கடற்றொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.
ஆனால் 70 குடும்பங்களிடம் மட்டுமே கடற்றொழிலுக்கான படகுகள் இருக்கின்றன. ஏனைய கடற்றொழிலாளர்கள் எவ்விதமான தொழில் வசதிகளும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அனைத்து கஸ்ரங்களையும் தாண்டி கடன் வாங்கியும் மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் மீன்பிடி வலைகளை வாங்கினால் அவற்றைக் கொண்டு தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.
வலையைப் போட்டால் இழுவைப் படகுகளில் வந்து அவற்றை அறுத்து நாசம் செய்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
இந்திய இழுவைப் படகுகள் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இழுவைப் படகு தொழிலாளர்களாலும் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த காலப் போரில் அனைத்தையும் இழந்து வாழ்வைக் கட்டியெழுப்ப போராடி வருகிறோம். இந்நிலையில் எமது தொழிலை இடையூறு இன்றி மேற்கொள்ள வழியேற்படுத்துங்கள் எனவும் அவர்கள் முதலமைச்சரிடம் கோரினர்.
இந்திய இழுவை படகுகளால் தங்களுக்கு பாதிப்பு என யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மீனவர்கள் பேசுகின்றனர். அதே மீனவர்கள் இழுவைப் படகுகளில் எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்து அனைத்து வழங்களையும் அழித்துவருகின்றனர்.
யாழ்ப்பாண மீனவர்களிடம் மட்டும்சுமார் 170 வரையான இழுவைப் படகுகள் உள்ளன. அவை எமது பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன எனவும் வலைப்பாடு மீனவர்கள் குறிப்பிட்டனர்.
வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரையே கடற்றொழிலுக்குச் செல்லும் நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இந்திய மீனவர்களாலும், யாழ்ப்பாணம், மன்னார் பகுதி இழுவைப்படகு தொழிலாளர்களால் எமது வழங்கள் அழிக்கப்பட்டு முற்றாக தொழிலை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.
வலைப்பாடு, பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணைமாதா நகர், 3ம் பிட்டி, விடத்தல்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் முற்றாக தொழிலை கைவிடும் நிலைக்கே வந்துவிட்டோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டோம். அதற் குப் பின்னர் கையில் ஒன்றுமே இல்லாமல் வந்து மீள்குடியேறினோம். கடன்பட்டு, கஸ்டப்பட்டு அற்ப சொற்ப வளங்களைக் கொண்டு தொழில் செய்ய தொடங்கியிருக்கும் எம்மை இந்திய இழுவை படகுகளும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் இழுவை படகு தொழிலாளர்கள் அழித்தே விட்டார்கள்.
எங்களையும் கவனத்தில் எடுங்கள். அன்றாடம் உணவுக்காகவேனும் பிழைப்பை நடத்த எமக்கு வழியேற்படுத்திக் கொடுங்கள். எமது தொழிலை நாங்கள் சுதந்திரமாக செய்ய தகுந்த வாய்ப்பை கொடுங்கள் எனவும் உருக்கமாக முதலமைச்சரிடம் வலைப்பாடு கிராம மீனவர்கள் கோரினர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
» கச்சதீவுக்கருகில் மேலும் 5 இந்திய மீனவர்கள் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum