Top posting users this month
No user |
கடவுளுக்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டுமா? அரியநேத்திரன் கேள்வி
Page 1 of 1

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கடவுளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, இரண்டு இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குருக்கள்மடம் விஷ்ணு ஆலயத்திலும், வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்திலும் உள்ள விக்கிரகங்கள் திட்டமிட்டு சில, விசமிகளால் சேதப்படுத்தப்பட்டமை ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும்.
ஏற்கனவே மஹிந்ந அரசின் காலத்தில் குருக்கள்மடம் முருகன், ஆலயம் மாங்காடு பிள்ளையார் ஆலயம் மற்றும் பல ஆலயங்களில் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இவ்வாறான திட்டமிட்ட செயல்களை செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கூறிய போதும் அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் மஹிந்த அரசால் முன்னெடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மட்டக்களப்பு மாங்காட்டில் இருந்து குருக்கள்மடம் வரையும் கவனஈர்ப்பு ஊர்வலத்தையும் நடாத்தினோம்.
ஊர்வலத்தை தடுக்கும் நடவடிக்கையை முன்னைய மஹிந்த அரசு படையினரை கொண்டு தடுக்கமுற்பட்டதே தவிர, ஆலயத்தில் விக்கிரகங்களை உடைத்த எவரையுமே கைது செய்யப்படவில்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக மைத்திரி அரசு பதவியேற்று, நல்லாட்சியென வாயால் மட்டும் கூறும் இந்த சொல்லாட்சி அரசிலும், இந்துக் கோயில்களின் விக்கிரகங்கள் உடைக்கப்படுவதானது இந்துக்களை ஆத்திர மூட்டச் செய்கிறது.
சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. இதை அரசும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரும் உடனடியாக செய்ய வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் கடவுளுக்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டுமோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தில், சில விக்கிரகங்கள் வீதிகளிலும், ஆலய கிணற்றிலும் போடப்பட்டு, சென்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum