Top posting users this month
No user |
Similar topics
கூந்தலுக்கான தைலம்
Page 1 of 1
கூந்தலுக்கான தைலம்
அறிகுறிகள்:
முடி உதிர்வு.
செம்பட்டை நிறக்கூந்தல்.
தேவையான பொருள்கள்:
கரிசலாங்கண்ணிச்சாறு = 250 மி.லி
பொன்னாங்கண்ணிச்சாறு = 250 மி.லி
கீழாநெல்லிச்சாறு = 250 மி.லி
கீரை விதை = 10 கிராம்
கோரைக்கிழங்கு = 10 கிராம்
சந்தனக்கட்டை = 10 கிராம்
கார்போக அரிசி = 10 கிராம்
வெட்டிவேர் = 10 கிராம்
அகில் = 10 கிராம்
தேங்காய் எண்ணெய் = 1 லிட்டர்
இளநீர் = 200 மி.லி
செய்முறை:
கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் முழுச்செடியை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்து கொள்ளவும்.
கீரை விதைகளை எடுத்து அதில் 200 மி.லி இளநீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
கோரைக்கிழங்கு, சந்தனக்கட்டை, கார்போக அரிசி, வெட்டிவேர் மற்றும் அகில் போன்றவற்றை நன்றாக இடித்து மாவு போல இடித்து எடுத்து கொள்ளவும்.
ஒரு மண்பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் இதில் இலைச்சாறுகளை ஊற்றி மூடி வைத்து சிறு தீயாக எரித்து பிறகு மற்ற இடித்து வைத்த மூலிகைகளையும் போட வேண்டும்.
எல்லாம் நன்றாக கலந்து சாறு நன்றாக சுண்டியதும் ஒரு துணியை எடுத்து திரி போல திரித்து தைலத்தில் சிறிது நனைத்து எரித்து பார்க்க வேண்டும். திரியில் சொட சொடவென சத்தம் இருந்தால் மீண்டும் தைலத்தை சூடேற்ற வேண்டும். பிறகு மீண்டும் இது போல் சோதித்து தைலம் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற விட்டு வடிகட்டி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
தினமும் இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வரலாம். 7 நாட்களுக்கு ஒரு முறை இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கூந்தல் மிகவும் கருமையாக நீண்டு வளரும்.
குறிப்பு:
சளி பிடித்திருக்கும் போதும், உடல் நலம் சரியில்லாத போதும் இந்த தைலத்தை பயன்படுத்த கூடாது.
மேலும் மழைக்காலங்களிலும் பயன்படுத்த கூடாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum