Top posting users this month
No user |
Similar topics
அரைத்து விட்ட வெங்காய சாம்பார்
Page 1 of 1
அரைத்து விட்ட வெங்காய சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு = 200 கிராம்
சின்ன வெங்காயம் = 200 கிராம்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பெருங்காயம் = சிறிதளவு
பச்சை மிளகாய் = 3
தக்காளி = 100 கிராம்
மிளகாய் வற்றல் = 6
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
தேங்காய் = அரை மூடி
கருப்பு எள் = 2 ஸ்பூன்
புளி = எலுமிச்சை அளவு
வெந்தயம் = அரை ஸ்பூன்
கடுகு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விடவும். கடைந்து கொள்ளவும். வெங்காயம் உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் கீறிக் கொள்ளவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவவும்.
வெறும் வாணலியில் எள்ளை மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அடுத்து சிறிது எண்ணெயில் 4 மிளகாய் வற்றல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்துக் கொள்ளவும். கடைசியாக தேங்காயைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
எள்ளை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். மற்ற வறுத்த தேங்காய், மிளகாய் வற்றல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து சிறிது வதக்கி அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டு கிளறவும்.
நன்றாகக் கிளறியதும் கரைத்த புளியை விட்டு உப்பு சேர்த்து மேலும் மூடி சிறிது கொதிக்க விட்டு அதனோடு கடைந்த பருப்பையும் சேர்த்து மீண்டும் சிறிது கொதிக்க விட்டு எள்ளு பொடி தூவி இறக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெயை விட்டுக் கடுகு, வெந்தயம், 2 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான அரைத்து விட்ட வெங்காய சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல், உப்புமா, அடை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum