Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமெரிக்கா – இலங்கை இறுக்கமடையும் உறவு

Go down

அமெரிக்கா – இலங்கை இறுக்கமடையும் உறவு Empty அமெரிக்கா – இலங்கை இறுக்கமடையும் உறவு

Post by oviya Sun Oct 18, 2015 1:26 pm

இலங்கையுடனான அரசியல், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அப்பால், இலங்கைப் படைகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா உதவிகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது.
இலங்கைப் படைகளுடன், குறிப்பாக, இலங்கைக் கடற்படையுடனான நெருக்கத்தையும், பயிற்சிகளையும் அமெரிக்கா அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை கடற்படையுடன் அமெரிக்கா உறவுகளைப் பலப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அப்போதைய பாதுகாப்புச்செயலர் பஸ்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட குழுவினர், அமெரிக்க கடற்படையின் “யு.எஸ்.எஸ். கார்ல்வின்சன்”, என்ற விமானம் தாங்கி கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அது அமெரிக்க கடற்படைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறப் போவதை வெளிப்படுத்திய முதல் நிகழ்வாகும்.

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் ஒன்றுக்குள் இலங்கையின் அமைச்சர்களும், கடற்படை அதிகாரிகளும் அதற்கு முன்னர் ஒருபோதும், நுழைய அனுமதிக்கப்பட்டதில்லை.

இதற்குப் பின்னர், திருகோணமலைக் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினருக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் கூட்டுப் பயிற்சிகள் பல இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில பகிரங்கமாகவும், வேறு சில இரகசியமாகவும் இடம்பெற்றுள்ளன.

அதைவிட, இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்தும் வகையில், முக்கியமான கருவித் தொகுதிகளையும், அமெரிக்கா வழங்கியிருக்கிறது.

நீருக்கடியில் உள்ள பொருட்களையும், வெடிபொருட்களையும், அடையாளம் காண உதவும் சோனார் கருவிகள் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவினால், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

இப்போது, கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் பொருட்கள், வெடிபொருட்களை மீட்கும் தன்னியக்க கருவிகளை Remotely Operated Vehicle (ROV) அமெரிக்கா வழங்கியிருக்கிறது.

இவையிரண்டும், இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்தின் கீழ் தான் வழங்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டிருப்பினும், அந்தக் காரணம் காலப்பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், இலங்கையில் பெரும்பாலும் கண்ணிவெடிகள், வெடிபொருட்கள் தரையில் தான் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள், கடற்கண்ணிவெடிகளையும், கடலுக்கு அடியில் பயன்படுத்தும் வெடிபொருட்களையும், போரின் போது பயன்படுத்தியிருந்தனர். ஆனால், அவை பெரியளவில் விதைக்கப்பட்டிருக்கவில்லை.
கடலில் கண்ணிவெடிகளை புதைப்பது சிரமமானது, செலவு மிக்கது, அதைவிட, ஆபத்தானதும் கூட.

உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை அதிகளவில் பயன்படுத்தியதில்லை.

கடற்பகுதியின் கட்டுப்பாடு நிலைமாறும் தன்மையுடையதாக இருந்தது. இதனால், பொதுமக்களும், கடற்புலிகளும் கூட ஆபத்தை சந்திக்க வேண்டி வரலாம்.

1994ல், காங்கேசன்துறை துறைமுகத்தில், சீ டான்சர் என்ற சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல் ஒன்று புலிகளின் கடற்கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.

அதற்காக, வருத்தம் தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவுக்கு கடிதம் எழுத நேரிட்டது. அதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவே, புலிகள் கடற்கண்ணிவெடிகளை பயன்படுத்தவில்லை.

எனினும், கடலுக்கடியில் சுழியோடிச் சென்று வெடிபொருட்களை கடற்படைக் கப்பல்களில் பொருத்தி வெடிக்க வைத்திருக்கின்றனர்.

போர் முடிந்த பின்னரும் கூட கடற்கண்ணிவெடிகள் என்று கடற்படையினர் மீட்டதாகத் தெரியவில்லை.

அது இலங்கையில் பெரியதொரு அச்சுறுத்தலுக்குரிய விவகாரமாகவும் இருந்ததில்லை.

எனவே, கண்ணிவெடியற்ற இலங்கையை உருவாக்குவதற்காக, கடலில் கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தக் கருவிகளை வழங்கியதாகவோ, பயிற்சிகளை அளித்ததாகவோ அமெரிக்காவினால் கூறப்படும் நியாயங்கள் சந்தேகத்துக்குரியவை.

கடலில் வெடிபொருட்களை கண்டறிதல் மற்றும் கடலுக்கடியில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் சிதைவுகளை மீட்டல் ஆகியவற்றுக்கு இரண்டு கட்டங்களாக அமெரிக்கா பயிற்சி அளித்திருக்கிறது.

அதேவேளை, அண்மைய காலங்களில், திருகோணமலைக் கடலில் இரண்டு பயிற்சித் திட்டங்களை அமெரிக்கா வழங்கியிருக்கிறது.

கடந்த ஜுன் மாதம் கடற்படைப் படகு ஒன்று மூழ்கி, விபத்துக்குள்ளானதில் ஒரு கடற்படைச் சிப்பாய் பலியான பின்னரே, அமெரிக்க- இலங்கைக் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் விடயம் வெளிச்சத்துக்கு வந்தது,

ஆனாலும் அமெரிக்கா அப்போது அதுபற்றி எதையும் கூறவில்லை. இப்போது இரண்டாவது கட்டமாக திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து, 20 கடற்படைச் சுழியோடிகளுக்கு அமெரிக்க கடற்படையின் 10 பேர் கொண்ட குழு பயிற்சி அளித்திருக்கிறது.

இரண்டு வாரங்கள் நடந்த இந்தப் பயிற்சி முடிந்த பின்னர் தான் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதுபற்றிய ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி என்பது மீள ஆரம்பிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இலங்கைப் படையினருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்த பின்னர், அமெரிக்காவில் பயிற்சி பெறும் வாய்ப்புகளை இலங்கைப் படையினர் அதிகளவில் இழக்க நேரிட்டது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், 58வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க இராணுவ போர்க்கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்ப முயன்ற போது, போர்க்குற்றச்சாட்டுகள், மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி அமெரிக்கா அவரை அனுமதிக்க மறுத்திருந்தது.

அதுபோல, 53ஆவது டிவிசனின் தளபதியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவையும், அமெரிக்கா பயிற்சியில் சேர்த்துக் கொள்ள மறுத்திருந்தது.

இலங்கையுடனான இராணுவப் பயிற்சிகளை மட்டுப்படுத்தியிருப்பதாக, கடந்த ஆண்டுகளில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட ஆண்டு அறிக்கைகளில் கூட குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில் கணிசமான நெகிழ்வுத் தன்மையை அவதானிக்க முடிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க பயிற்சித் திட்டங்களில் படை அதிகாரிகளுக்கு, வாய்ப்பளிப்பது தொடர்பான கொள்கையை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்று, இலங்கை பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்தது.

குறிப்பாக, மூத்த படை அதிகாரிகளுக்கு பயிற்சிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் கோரியது. அந்த விடயத்தில் அமெரிக்கா இன்னமும், நெகிழ்வுப் போக்கைக் கையாளவில்லை.

ஐ.நா. விசாரணை அறிக்கையிலும் கூட, மனித உரிமை மீறல் விவகாரங்களில் தொடர்புடைய படையினரை வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு தெரிவு செய்வதில் கடுமையான கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், அமெரிக்கா அந்த விடயத்தில், உடனடியான மாற்றத்தை வெளிப்படுத்தாது என்றே கருதப்படுகிறது.

எனினும், இலங்கைக் கடற்படையுடனான ஒத்துழைப்பை விரிவாக்குவதில் மட்டும் அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, இலங்கை விமானப்படையின் கண்காணிப்பு விமானத்தில் பொருத்துவதற்கான, நிகழ்நேர கண்காணிப்புக் கருவிகளை அமெரிக்கா வழங்கியிருந்தது.

இப்போது, சோனார், கடலுக்கடியில் வெடிபொருட்களை மீட்கும் தன்னியக்க கருவிகள் என்று பலவற்றை வழங்கியிருக்கிறது அமெரிக்கா.

இவையெல்லாம், இந்தியப் பெருங்கடலில், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான அமெரிக்காவின் நகர்வுகள்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றதை அமெரிக்காவினால் அவ்வளவு இலகுவாக மறக்க முடியவில்லை.

அத்தகையதொரு வாய்ப்பு மீண்டும் சீனாவுக்கு கிடைக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கிறது.

இலங்கைத் தீவை தனது பாதுகாப்புத் திட்டத்துக்குள் உள்வாங்கிக் கொள்வதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் கால் வைக்கும் சீனாவின் திட்டத்துக்கு, முட்டுக்கட்டை போட எத்தனிக்கிறது அமெரிக்கா.

இதற்காகவே இலங்கைக் கடற்படையை தன் பக்கம் வளைத்துப் போட்டு வருகிறது.

வரும் நாட்களில், அமெரிக்க – இலங்கைக் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் இன்னும் அதிகரிக்கக் கூடும்.

அதற்கான அரசியல், இராஜதந்திரப் புறச்சூழல்கள் அமெரிக்காவுக்குச் சாதகமாகவே இருப்பதை மறுக்க முடியாது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum