Top posting users this month
No user |
கொடநாடு செல்லும் ஜெயலலிதாவால் ராமேஸ்வரம் வர முடியாதா? விஜயகாந்த்
Page 1 of 1

ஓய்வு எடுப்பதற்காக கொடநாடு செல்ல முடிகின்ற முதல்வர் ஜெயலலிதாவால் ராமேஸ்வரத்துக்கு வந்து அப்துல் கலாமுக்கும் அஞ்சலி செலுத்த முடியாதா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 84வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, ஏ.கே.டி.ராஜா, மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் ஏராளமான தொண்டர்களுடன் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அங்கு கூடி இருந்த மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி உபகரண பொருட்களையும் விஜயகாந்த் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, அப்துல் கலாமின் பிறந்த நாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது
எழுச்சி நாளாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வராமல் கொடநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்று விட்டார்.
கொடநாடு செல்ல முடிகின்ற முதல்வருக்கு ராமேஸ்வரம் வர முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum