Top posting users this month
No user |
அரசாங்க அதிபரை மதிக்காத ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு! மஹிந்தின் வழியில் மைத்திரி?
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் போன்று ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் ஏனைய அரச அதிகாரிகளை அலட்சியம் போக்கு தற்போதும் தொடர்கின்றது.
அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை அநுராதபுர முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த கூட்டம் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு அநுராதபுர மாவட்டத்தின் பிரதேச ஊடகவியலாளர்கள் மாகாண பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் செய்தியாளர்களை உள்ளே விட மறுத்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர், மாவட்ட அரசாங்க அதிபர் குமாரசிறியையும் அலட்சியம் செய்து நடந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்பின்னர் பொலிஸ் உயரதிகாரியொருவரின் பணிப்புரையில் பிரதேச ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர இடமளித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த ஆறாம் திகதி நடைபெற்ற ஆசிரியர் தின வைபவத்தின்போதும் ஜனாதிபதி முன்னிலையில் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினர் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க முனைந்து மூக்குடைபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum