Top posting users this month
No user |
செக்ஸ் தொல்லைகளில் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் உடையில் பணி புரியும் சிறுமி
Page 1 of 1

குஜராத் மாதிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் உடையில் பணி புரிவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவா பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் மற்றும் அனிதா தம்பதியினர்.
இவர்களது 14 வயது மகள் பாயல்பரியா. சிறுவயதிலேயே அவளது தந்தை மனோஜ் வலிப்பு நோயால் இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது.
பாயல்பிரியாவின் மூத்த சகோதரர் சுனில் (30). ஒரு தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். எனினும் அவர் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை தவிக்க விட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார்
எனவே சிறுமியான பாயல் தனது 4 வயது முதல் ‘ஷு’ பாலிஷ் போடும் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினாள்.
இதற்கிடையில் காமுகர்களின் ‘செக்ஸ்’ தொல்லையில் இருந்து மகளை காப்பாற்ற தாயார் அனிதா ஒரு வழி கண்டுபிடித்தார்.
அதன்படி சிறுமியை தலைமுடியை வெட்டி விட்டார். அதனால் பார்க்க அவள் சிறுவன் போன்று காட்சி அளித்தாள்.
அவளிடம் பேச்சு கொடுத்தால் மட்டுமே சிறுமி என தெரியும்.
இது குறித்து பாயல் கூறியதாவது, நான் பிறக்கும்போதே எனது தந்தைக்கு வேண்டாத குழந்தையாக அதாவது 3–வது பெண்ணாக பிறந்தேன்.
எனது தாயார் சிறு சிறு வேலைகள் செய்து எங்களை காப்பாற்றினார். தந்தை வலிப்பு நோயால் இறந்த பின் குடும்பம் வறுமையில் வாடியது.
எனவே நான் என் பாதுகாப்புக்காக தலைமுடியை சிறுவன் போன்று வெட்டிக்கொண்டு ‘ஷு’ பாலிஷ் போட்டு சம்பாதித்து வருகிறேன்.
தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum