Top posting users this month
No user |
இந்து சமுத்திர வலய போதைப் பொருள் தடுப்பு மாநாடு ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு
Page 1 of 1

இந்து சமுத்திர வலயத்திலுள்ள 21 நாடுகளைச் சேர்ந்த 7 நிறுவனங்களின், சிரேஷ்ட அதிகாரிகள் 60 பேர் பங்குபற்றும் இந்து சமுத்திர வலய போதைப் பொருள் தடுப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷா டி சில்வா மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை தளபதி உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்து சமுத்திர வலயத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் பங்குகொள்ளும் இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
கொழும்பு தாஜ் சமூத்ரா ஹோட்டலில் ஆரம்பமான இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான நிறுவனம், உலக சமுத்திர குற்றம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஆகிய ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
வலயத்திலுள்ள போதைப் பொருள் நிவாரண நிறுவனங்களோடு, ஒத்துழைப்பை மேம்படுத்துதல், போதை ஒழிப்பு நிவாரண நடவடிக்கைகளில் கடலிலும் மற்றும் துறைமுகங்களிலும் போதைப் பொருட்களை கைப்பற்றுதல் தொடர்பாக தகவல்களை முகாமைத்துவத்தை விருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஆழ்கடலில் மீன்பிடி படகுகள் மற்றும் வேறு கடல் இயந்திர படகுகளில் போதைப் பொருட்களை பதுக்கி வைக்கும் இடங்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை பயிற்சி மூலம் இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்போடு, 15 ஆம் திகதி கொழும்பிலுள்ள கடற்படை முகாமில் ஒன்றிணைந்த சமுத்திர படைப்பிரிவு இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum