Top posting users this month
No user |
Similar topics
மக்களை மாயைக்குள் வீழ்த்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
Page 1 of 1

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்றத்தில் பதாகைகளைத் தாங்கியவாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தால் பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கலப்பு நீதிமன்றுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு எனும் போது பொது மக்களுக்கு எதுவுமே புரியாத நிலை ஏற்படவே செய்யும்.
ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழர். அதேநேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலப்பு நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு என்றும் சொல்லப்படுகிறது.
ஆக, இலங்கைப் பாராளுமன்றத்தில் அரசு, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வேறுபட்ட மூன்று நிலையினர் இருப்பது புரிகிறது.
எதுவாயினும் கலப்பு நீதிமன்றத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு என்பது அதிர்ச்சிக்குரிய விடயம்.
ஏனெனில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் கை விடப்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் என்பது எந்த இடத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.
இருந்தும் கலப்பு நீதிமன்றம் எனக் கூறி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குழப்பம் நடத்துவது போர்க் குற்றம் தொடர்பில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்பதாலாகும்.
எனவே போர்க்குற்றம் தொடர்பில் எத்தகைய விசாரணைகள் இடம்பெறுவதையும் தடுக்கின்ற நோக்கில், கலப்பு நீதிமன்ற விசாரணை இடம்பெறப் போவது போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு மாயையை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர்.
கலப்பு நீதிமன்றத்தின் ஊடாகவே போர்க்குற்ற விசாரணை இடம்பெறப் போவதாக பாராளுமன்றத்தில் தெரிவிப்பதன் மூலம் சாதாரண சிங்கள மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி மீண்டும் வன்முறையை தோற்றுவிப்பதே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திட்டம்.
உண்மையில் கலப்பு நீதிமன்ற விசாரணையை கூட ஐ.நா உருவாக்கவில்லை என்று தமிழ் அரசியல் தலைமைகள் கூக்குரல் போட்டிருந்தால் கலப்பு நீதிமன்றம் என்றவாறான ஒரு திசை திருப்பத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்களால் செய்ய முடியாது போயிருக்கும்.
மாறாக உள்ளக விசாரணையும் நடத்தக் கூடாது என்ற கோத்தை மகிந்த ராஜபக்வுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியிருப்பர்.
இது இலங்கையின் பெரும்பான்மை இனம் சார்ந்தவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை சர்வதேசத்திற்கு அறிவித்திருக்கும்.
பரவாயில்லை கலப்பு நீதிமன்றத்திற்கு எதிப்பு என்பது உள்ளக விசாரணையையும் பலவீனப்படுத் துவதற்கானது என்பது தெரிந்ததே.
இங்குதான் இலங்கை அரசு ஐ.நாவில் ஒரு வடிவமும் இலங்கையில் இன்னொரு வடிவமும் எடுத் துள்ளமையை உணர முடியும்.
ஆக, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் போராட்டத்திற்கு அரசின் ஆசீர்வாதம் நிறையவே உண்டு.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதனை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை!
» கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகர அபிவிருத்தி சம்பந்தமான முறைகேடுகள் பற்றி அறிக்கை
» முற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum