Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி

Go down

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி Empty அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி

Post by oviya Fri Oct 09, 2015 2:11 pm

அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இவர்களின் குடும்பத்தினர் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

பொது மன்னிப்பு என்பது இலங்கைக்கு புதிதொரு விடயமல்ல என்பதால், இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் சிலர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையில் வைத்து இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய நபரும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிலருக்கு எதிராக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் என அடையாளம் கண்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு விதிக்கப்படும் சிறைத்தண்டனை காலத்தை விட அரசியல் கைதிகள் தமது காலத்தை சிறைகளில் கழித்துள்ளனர்.

இந்த விடயத்தை ஆராயந்து பார்த்து தற்போது நாட்டில் நல்லாட்சியே இருக்கின்றது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum