Top posting users this month
No user |
Similar topics
நல்வழி காட்டும் ஹோரை நேரங்கள்
Page 1 of 1
நல்வழி காட்டும் ஹோரை நேரங்கள்
ஹோரை நேரம் எப்படி பிரிக்கப்படுகிறது?
பொதுவாக, இந்த ஹோரை நேரமானது கிரகங்களின் அடிப்படையில் பிரித்து, அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி போன்ற ஏழு கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, கேதுவுக்கு தனியான ஒரு ஹோரை நேரம் கிடையாது.
ஹோரை நேரம் எதற்காக?
நாம் செய்ய விரும்பும் காரியங்களை எந்த ஹோரையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இந்த ஹோரை நேரம் நமக்கு வழிகாட்டுகிறது. காலை ஆறு மணிக்கு இந்த ஹோரை நேரம் துவங்குகிறது.
ஹோரை நேரத்தை எப்படி பார்ப்பது?
ஹோரை நேரத்தை எப்படி பார்க்க வேண்டும் என்றால் உதாரணமாக ஞாயிறுக்கிழமை என்று வைத்துக்கொண்டால், அன்றைய நாளில் காலை 6 மணிக்கு சூரிய ஹோரை நேரம் துவங்கும். சூரிய ஹோரை நேரம் 6 மணிக்கு துவங்கி 7 மணிக்கு முடியும். பின்பு 7 மணி முதல் சுக்கிர ஹோரை நேரம் துவங்கி 8 மணிக்கு முடியும், ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒவ்வொரு ஹோரை நேரம் நடந்துகொண்டு வரும். நாம் செய்யும் காரியங்களுக்கு அந்த நேரம் பலன் தருமா என்று பார்த்து நாம் செயலில் இறங்கினால், நல்ல பலன் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் வகுத்துவைத்துள்ளனர்.
சூரிய ஹோரை
அரசாங்க சம்பந்தமான காரியங்களில் ஈடுபட, அரசு சம்பந்தப்பட்ட டென்டர், கான்ட்ராக்ட் போன்றவற்றில் கையெழுத்து போட, அரசியலில் ஈடுபட, கட்சி தொடர்பான செயல்களில் ஈடுபட, அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசுதல், தந்தை வழி உறவினர்களை கலந்து பேச, அரசு பதவி ஏற்றல் தொடர்பான காரியங்களில் ஈடுபட…
சந்திரன் ஹோரை
விவசாயம் ஆரம்பித்தல், விதை விதைத்தல், அறுவடை செய்தல், நீர் சம்பந்தப்பட்ட தொழில் ஆரம்பிக்க, பெட்ரோல் பங்க், தேநீர் கடை துவங்க, கலைத் துறையில் சேர, தாயை சந்தித்துப் பேசுதல், பெண்களைச் சந்தித்தல், அம்மன் வழிபாடு செய்தல்…
செவ்வாய் ஹோரை
புதிய வாகனம் வாங்குதல், பழைய வாகனத்தைப் பழுது பார்க்க, காவல் நிலையத்துக்குச் சென்று புகார் செய்ய, மர வேலை பார்க்க, வீடு கட்ட ஆரம்பிக்க அல்லது வீடு வாங்க, கிரகப்பிரவேசம் செய்ய, செங்கல் சூலை ஆரம்பிக்க…
புதன் ஹோரை
கல்வி கற்க ஆரம்பித்தல், மேல் படிப்பு துவங்க, ஜோதிடரை பார்க்க, கமிஷன் தொழில் ஆரம்பிக்க, கடிதம் அனுப்ப மற்றும் இ மெயில் மற்றும் எழுத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் துவங்க, கதை எழுத, கவிதை எழுத, நூல் வெளியிட, சுப காரிய பேச்சை ஆரம்பிக்க…
குருஹோரை
குரு பூஜை செய்ய, பாட்டு மற்றும் நடனம் ஆரம்பிக்க, திருமணம் செய்ய, கடைத் திறப்பு விழா மேற்கொள்ள, வங்கியில் பணம் போட, தங்க ஆபரணங்கள் வாங்க, கோவிலுக்குச் செல்ல, பாபாவை தரிசிக்க, பொதுவாக நல்ல விஷயங்களை ஆரம்பிக்க, ஆன்மிகவாதிகளைச் சந்திக்க, பெரியவர்கள் அல்லது சித்தர்களைக் காண…
சுக்கிரன் ஹோரை
பட பூஜை செய்ய, ஆடல் அரங்கேற்றம், கலைத் துறையில் சேர, காதலை சொல்ல, புதிய ஆடை ஆபரணம் வாங்க, விளையாட்டுப் பொருட்கள் வாங்க, கொடுத்த பணத்தைக் கேட்க, திருமணப் பேச்சு வார்த்தை செய்ய, அலங்காரப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கடை துவங்க, அழகு நிலையம் துவங்க, உல்லாசப் பயணம் செல்ல, பாடல் கற்றுக்கொள்ள…
சனி ஹோரை
கடன் கொடுத்தல், மருத்துவரிடம் செல்லுதல், இரும்புத் தொழில் ஆரம்பிக்க, வயதானவர்களுக்கும் ஊனமுற்றோர்க்கும் அன்னதானம் செய்தல், ஏழை மாணவர்களுக்கு உதவுதல், சனி பகவானை தரிசித்தல், வெளிநாடு செல்ல முயற்சித்தல், தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதவுதல்…
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum