Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்லில் இருந்து கசிந்த ரத்தம்: சுயம்புவாக தோன்றிய சனிபகவான் என நம்பும் மக்கள்

Go down

கல்லில் இருந்து கசிந்த ரத்தம்: சுயம்புவாக தோன்றிய சனிபகவான் என நம்பும் மக்கள் Empty கல்லில் இருந்து கசிந்த ரத்தம்: சுயம்புவாக தோன்றிய சனிபகவான் என நம்பும் மக்கள்

Post by oviya Wed Oct 07, 2015 2:00 pm

வீடுகளில் மரப்பொருட்களினாலும், இரும்பினால் ஆன கதவுகள் அமைத்து பாதுகாப்பாக வசிப்பதற்கு தான் நாம் பெரும்பாலும் விரும்புவோம்.
ஆனால் இங்கு ஒரு கிராமத்தினர் தங்கள் வீடுகளில் கதவுகளே இல்லாமல் வசித்து வருகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா ?

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகரில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தான் சனி சிங்கனாபூர். இந்த கிராமத்துக்கு என்று தனி சிறப்பு உண்டு.

அதாவது இங்குள்ள எந்த வீடுகளிலும் கதவுகளே இல்லை என்பதுதான் அது. வீடுகள் மட்டுமல்லாமல், சிறுகடைகள், வணிக வளாகங்கள், ஏன் சில வங்கிகள் கூட கதவுகள் இல்லாமல் செயல்படுகிறது என்றால் நம்ப முடிகிறா?

ஆனால் அதுதான் உண்மை. இந்த விசித்திரமான பழக்கத்திற்கு காரணமும் உண்டு.

இந்த கிராமத்தில் உள்ள சனி பகவான் கோவிலில் சுயம்புவாக இருக்கும் சனீஸ்வரன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், அதனால் இங்குள்ள வீடுகளில் யாரும் திருடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இங்குள்ள சனி பகவானின் கர்ப்ப கிரகத்துக்கு மேற்கூரை கிடையாது என்பதும் குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக செவி வழி செய்தி ஒன்று கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில், இந்த கிராமத்தில் ஆடு,மாடு மேய்த்துகொண்டிருந்த ஒருவர் தனது கையில் இருந்த குச்சியால் ஒரு கல்லை குத்தியுள்ளார்.

அதில் இருந்து இரத்தம் கசிவதை பார்த்த அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கிராமத்தினரும் இந்த அதிசயத்தை பார்த்து சென்றனர். பின்னர் அன்றிரவு மாடு மேய்ப்பவரின் கனவில் தோன்றிய சனி பகவான், தான் அந்த கல்லில் சுயம்புவாக தோன்றியுள்ளதாகவும் தனக்கு தினமும் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த உலகமே எனக்கு கூரை என்பதால் தனியாக கூரை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

அன்றிலிருந்து கல் இருந்த இடத்தில் மேற்கூரை எதுவும் அமைக்கப்படாமல் இன்றுவரை சனி பகவானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

தினமும் இந்த சனி பகவானை தரிசிக்க 30 ஆயிரம் பக்தர்கள் வரை வருவதாக கூறப்படுகிறது. சனி பகவானின் மீதுள்ள பக்தியின் காரணமாக உள்ளூர் மக்களும் தங்களின் வீடுகள் ,அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்றவைகளுக்கு கதவுகள் அமைப்பதில்லை.

எனினும் நிலைகதவுகள் போன்ற அமைப்புகளை அமைத்துள்ளனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்தில் அங்கொன்றும் இன்கொன்றுமாக சிறு சிறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக ஒரு சிலர் தங்கள் வீடுகளில் கதவுகளை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சனி பகவானை தரிசிக்க என்றில்லாமல் கதவுகள் இல்லா வீடுகளை பார்க்கவும் இந்த கிராமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum