Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு: காட்டுக்குள் பத்திரமாக விட்ட மக்கள்

Go down

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு: காட்டுக்குள் பத்திரமாக விட்ட மக்கள் Empty ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு: காட்டுக்குள் பத்திரமாக விட்ட மக்கள்

Post by oviya Sat Oct 03, 2015 1:49 pm

கிருஷ்ணகிரியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வணங்கி தூக்கிச் சென்ற மக்கள் காட்டுக்குள் பத்திரமாக விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சூளகிரியில் முனியப்பா என்பவர் தமது ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளார் முனியப்பா,

அப்போது முட்புதருக்குள் இருந்த மலைப்பாம்பு ஒன்று முனியப்பாவின் ஆடு ஒன்றை பிடித்து விழுங்கி கொண்டிருந்தது.

மலைப்பாம்பு ஆட்டை விழுங்குவதைக் கண்ட முனியப்பா ஆட்டை மீட்பதற்காக அங்கிருந்து ஓடி வந்து கிராம மக்கலை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்கு வந்துள்ளார்.

ஆனால் அதற்குள் ஆட்டை முழுவதுமாக அந்த மலைப்பாம்பு விழுங்கியுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் அந்த மலைப்பாம்பை கெட்டூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று விட்டனர்.

மலைப்பகுதியில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் யானை, குரங்கு மற்றும் பாம்புகளை கடவுளாக வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum