Top posting users this month
No user |
எதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்!
Page 1 of 1

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் யாழ்.வலி. கிழக்கு வளலாய் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்.வந்த எதிர்க்கட்சி தலைவர் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளை நேற்றைய தினம் பார்வையிட்டிருத்த நிலையில் இன்றைய தினம் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வளலாய் பகுதிக்கு சென்றிருந்த எதிர்க்கட்சி மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது மக்கள் தமக்கு மீள்குடியேற்றத்தின் பின்னர் எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் வீட்டுத்திட்டம், மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பாக முழுமையாக கேட்டறிந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர், மக்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் முழுமையாக மீள்குடியேற்றப்படவேண்டும் என சுட்டிக்காட்டியதுடன் எதிர்வரும் மார்கழி மாதத்திற்குள் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படவேண்டும் எனவும், அதற்குப் பின்னர் மக்களுடைய அடிப்படை வசதிகள் தொடர்பாக அதிகம் கவனம் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதுவரையில் மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum