Top posting users this month
No user |
Similar topics
பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1
பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொலிஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பில் பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அன்றைய பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக காலி வந்துரம்ப பிரதேசத்தில் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு அங்கு வந்த மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான குண்டர்கள், பொதுக்கூட்ட மேடைக்கு தீவைத்து எரித்து நாசம் செய்திருந்ததுடன், ஏற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில், பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம பலவந்தமாக அந்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவித்து அழைத்துச் சென்றிருந்தார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்திருந்த வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது பதவியை ராஜினாமாச்செய்து மஹிந்த அரசின் அடாவடித்தனங்களுக்கு பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர் மீண்டும் பொலிஸ் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசாரினால் பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதியமைச்சர் முதுஹெட்டிகம மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தனர்.
எனினும் எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதிவரை வழக்கை ஒத்திவைப்பதாக பத்தேகம மாஜிஸ்திரேட் நீதிபதி எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» ஐ.ம.சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
» ஐ.ம.சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum