Top posting users this month
No user |
சித்த மருத்துவத்தை மேலைத்தேய மக்கள் விரும்புகின்றனர்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Page 1 of 1

கிளிநொச்சி கல்மடு நகரில் மாகாண மூலிகைக் கிராமம் ஆரம்பித்து வைத்தலும் சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும் இன்று நடைபெற்றது.
வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகளும் புனர்வாழ்வும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஒழுங்கமைப்பில் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், இந்திய துணைத்தூதர் நடராஜ், வடக்கு மாகாண மருத்துவத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம், வடக்கு மாகாண ஆளுனர் பளிகக்கார உட்பட வடக்கு மாகாண முன்னாள் பிரதிபிரதம செயலர் இராசநாயகம், வடக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட சித்த மருத்துவத்துறை சார்ந்த வைத்தியர்கள், மாணவர்கள், திணைக்கள தலைவர்கள், மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு சிறப்புரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸவரன்,
சித்த மருத்துத்துறை இன்று பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. பாரம்பரிய மிக்க இந்த மருத்துவத்துறை இன்று இலகுபடுத்தப்பட்ட முறையில் வளர்ந்திருக்கின்றது. முன்பு எமது மக்கள் நாம் இந்த சுதேச மருத்துவத்தையே பின்பற்றினோம். பின்புகாலம் செல்ல மேலைத்தேய மருத்துவத்துறையை பின்பற்றுகின்றோம். ஆனால் மேலைத்தேய மக்களோ எமது இந்த பாரம்பரிய மருத்துவத்துவத்தை நாடுகின்றனர். உலகளாவிய ரீதியில் இந்த மருத்துவத்தின் மகத்துவம் உணரப்படுகின்றது. இதன் வெளிபாடாகத்தான் இன்று கிளிநொச்சி கல்மடுநகரில் ஒரு மூலிகைப்பண்ணையை அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது. இங்கு மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இத்தகைய பண்ணைகள் உருவாக்கப்பட்டு இந்த மருத்துவத்துறை பிரபலபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum