Top posting users this month
No user |
Similar topics
கடந்த அரசின் முக்கிய அமைச்சருக்கு மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் கொலையில் தொடர்பு
Page 1 of 1

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா கொலை செய்யப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தான் அறிந்திருந்தாகவும் தனக்கு, தனது மனைவியின் உயிருக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து காரணமாகவே நீதிமன்றத்தை புறக்கணித்து வந்தாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸங்க திஸாநாயக்க வவுனியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண சபையின் ஐக்கிய சோசலிசக் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்த இலக்கம் 144 மதவாச்சி என்ற விலாசத்தில் வசிக்கும் திஸாநாயக்க முதியான்சலாகே பியதாச திஸாநாயக்கலாகே நிஸ்ஸங்க திஸாநாயக்க என்ற இந்த நபர் பகிரங்க நீதிமன்றத்தில் இதனை கூறியுள்ளார்.
நிதி மோசடி சம்பந்தமாக இவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக விளக்கமறியவில் வைக்கப்பட்டிருந்தார்.
பிரான்ஸூக்கு அனுப்பி வைப்பதாக கூறி, ஒருவரிடம் 5 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன் பணத்தை திரும்ப வழங்காதது சம்பந்தமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவர், நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர், காவற்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.
மனைவிக்கும் தனக்கும் இருந்த உயிராபத்து காரணமாகவே தான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தாக நிஸ்ஸங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவை கொலை செய்தது விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் என்ற போதிலும் அதனை நெறிப்படுத்தியவர், கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பிரபல அமைச்சர் ஒருவர் (பெயரை குறிப்பிடுகிறார்) எனவும் திஸாநாயக்க கூறியுள்ளார். அவரிடம் இருந்த தமிழ் நபர் ஒருவரே (பெயரை குறிப்பிட்டுள்ளார்) கொலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
நான் சகல சம்பவங்களை அறிந்திருந்தேன். இதனால், அமைச்சர், என்னையும் எனது மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். உயிரை பாதுகாத்து கொள்ளவே இதுவரை காலம் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்தேன் என்றார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்திற்கும், வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வவுனியா இலக்கம் 1 நீதிமன்ற நீதவான் ராமகமலன் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜானக்க பெரேராவின் கொலை தொடர்பில் ஏதேனும் அறிந்திருந்தால், அதனை விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிடலாம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஸ்ஸங்க திஸாநாயக்க, தான் மோசடி செய்த 5 லட்சம் ரூபாவை திரும்ப வழங்க தயாராக இருப்பதாக கூறினார், எனினும் பணத்தை திரும்ப செலுத்தும் வரை பிணை வழங்க முடியாது என கூறிய நீதவான், அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா தலைமையக காவற்துறையின் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் உணவகம் தொடர்பில் முறைப்பாடு
» அரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்?
» இலங்கை அரசு கடந்த அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டும்: சீனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum