Top posting users this month
No user |
ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை! தமிழக முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு- திருமாவளவன் வரவேற்பு
Page 1 of 1

ஈழத் தமிழ் இனத்தையே அடியோடு கருவறுக்க சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வந்த இனப் படுகொலையின் உச்சகட்டமாக 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தது.
அதே வருடத்தில் இந்திய - கியூபா அரசுகள் மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசுக்கு பாராட்டுத் தீர்மானத்தை கொண்டுவந்து மாபாதகம் செய்தன.
தமிழகத்தில் மாணவர்களும், தமிழ் உணர்வாளர்களும் உலக நாடுகளில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களும் நடத்திய அறப்போரால் கடந்த வருடத்தில் முழுமையான நீதி வழங்காத ஒரு தீர்மானத்தை அமெரிக்கா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றியது.
அதன்படி அமைக்கப்பட்ட மார்ட்டி அட்டிசாரி தலைமையிலான பன்னாட்டு விசாரணைக் குழுவினை இலங்கைக்கு உள்ளேயே சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.
அதனால் அந்தக் குழுவின் அறிக்கையிலும் முழுமையான நீதி கிடைக்காது.
இந்த நிலையில் கொலைகாரனையே நீதிபதியாக்கும் அக்கிரமத்தை அமெரிக்க அரசு செய்ய முனைந்து, போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசே நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த மன்னிக்க முடியாத துரோகத்திற்கு இந்திய நரேந்திரமோடி அரசும் துணைபோகிறது.
அமெரிக்க அரசைக் கண்டித்து செப்டம்பர் 1 ஆம் திகதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப்போராட்டம் நடத்தியபோது, “பன்னாட்டு விசாரணைதான் வேண்டும் என்றும் இலங்கை விசாரணையை தடுக்க வேண்டும் என்றும்,
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று நான் கூறியதோடு, அப்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், தரணியில் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களும் வாழ்த்தி வரவேற்பார்கள்.
அப்படி வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று அறிவித்தேன். இன்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் 2011 ஜூன் 8 ஆம் தேதி அன்று இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அந்தத் தீர்மானத்தை முன்னய காங்கிரÞ அரசும், இன்றைய பாரதிய ஜனதா அரசும் குப்பையில் வீசிவிட்டு, சிங்கள அரசோடு பொருளாதார ஒப்பந்தங்கள் செய்தன.
2012 மார்ச் 23 ஆம் தேதி அன்று நான் விடுத்த அறிக்கையில், “தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, ஈழத் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத் தமிழர்களிடமும், பல நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடமும் ஐ.நா.மன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தேன்.
மார்ச் 27 ஆம் தேதி அன்று அத்தகைய தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் நிறைவேற்றியதற்காக ‘வரலாறு பொன்மகுடம் சூட்டும்’ என்று வாழ்த்தினேன்.
இன்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் ஏழரைக் கோடி தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. அவருக்கு வரலாறு வாழ்த்துச் சொல்லும்.
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு முறையான பன்னாட்டு விசாரணையை மனித உரிமை கவுன்சிலில் வலியுறுத்தாமல், அமெரிக்க- சிங்கள அரசுகளின் சதித்திட்டத்திற்கு உடந்தையாகச் செயல்படுமானால் நரேந்திர மோடி அரசை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.
என மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவை தீர்மானம்! தொல்.திருமாவளவன் வரவேற்பு
இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பிற அரசியல் கட்சிகளும், உலகத் தமிழர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஏற்கனவே இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண சபையும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தோம்.
வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை வழிமொழிந்தும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையை ஏற்றும் தற்போது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார வரவேற்கிறோம். தீர்மானத்தை முன்மொழிந்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருப்பதை உறுதி செய்துள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையரும் இலங்கையில் நடைபெற்ற குற்றங்கள் மிகவும் பயங்கரமானவை எனக் குறிப்பிட்டுள்ள நிலையிலும்,
இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்க வல்லரசு தன்னுடைய நிலையை இப்போது மாற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அமெரிக்காவின் சுயநலப்போக்குக்கு இந்தியப் பேரரசு பலியாகக் கூடாது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் நீதி வழங்கும் பெரும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதை உணர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் இந்திய அரசே ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் எனவும் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதில் உறுதியோடு இருக்க வேண்டும் எனவும்,
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் ஒருங்கிணைந்து எதிர்வரும் 21ஆம் நாள் போராட்டங்களை நடத்தவுள்ளனர். அப்போராட்டங்களுக்கு தமிழக அரசு தனது ஆதரவை நல்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum