Top posting users this month
No user |
Similar topics
நெல்லிக்காய் சாறு
Page 1 of 1
நெல்லிக்காய் சாறு
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் =10
சாட் மசாலா = 1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி = அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
பருப்பு தண்ணீர் = 2 கப்
வெண்ணெய் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காய் முற்றியதாக இருக்க வேண்டும். இந்த நெல்லிக்காயின் வெளிப்புறத்தில் இருக்கும் கோடுகளைக் கீறி தசைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இதனோடு சாட் மசாலா பொடி, பெருங்காயப் பொடி, உப்பு தேவையான அளவு சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் வெண்ணெய், பருப்பு தண்ணீர், எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான நெல்லிக்காய் சாறு தயார். இந்த சாறு ரைஸோடு சாப்பிடுவதை விட தனியாகக் குடிப்பதற்கே நன்றாக இருக்கும். சுடசுட குடிக்கும் போது உப்பு, உறைப்பு, இனிப்பு, புளிப்பு என்று பல சுவைகள் கலந்து இருக்கும்.
குறிப்பு:
அருநெல்லி மற்றும் பெரிய நெல்லி இரண்டையும் வைத்து இந்த சாறு தயாரிக்கலாம்.
மருத்துவ குணங்கள்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும். பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum