Top posting users this month
No user |
கலம் மெக்ரே தயாரிப்பில் மீண்டுமோர் ஆவணப்படம்!
Page 1 of 1

சர்வதேச ஜெனீவா மாநாடு 30வது கூட்டத்தொடர் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் சுதந்திர ஊடகவியலாளர் கலம் மக்ரே இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும்படியானதொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக் கொலைக்களம்(No Fire Zone) என்னும் ஆவணப்படத்தை முதலில் தயாரித்து இலங்கைக்கு தலைவலியைக் கொடுத்த கலம் மெக்ரோ தற்போது இலங்கை: நீதிக்கான தேடல் (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் மீண்டுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த அரை மணிநேர ஆவணப்படத்திற்கு இலங்கை; நீதிக்கான தேடல் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம் தமிழ் சிங்களம் ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
அவர்களைக் கேட்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும் போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.
தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, மற்றும் பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வரும் கலம் நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பிக்கவுள்ளார்.
இதேவேளை ஜெனிவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்தில் இதனை காண்பிக்கவும் கலம் மக்ரே திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இலங்கை அரசாங்கத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியவர்களுக்கு மிக பெரிய தலையிடியாக இவ்விடயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum