Top posting users this month
No user |
தோழியை அடைவதற்காக மனைவி கொலை....வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1

பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் , நண்பரின் மனைவியை அடைவதற்காக தீட்டிய மாபெரும் சதி திட்டம் அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களிலும் டெல்லி விமான நிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் வந்தது. சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பொலிசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் வசித்துவரும் கேரளாவை சேர்ந்த கோகுல் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கோகுல் போலிசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், ஷாலினியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒன்றாக படித்தோம்.
பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். டெல்லியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம். வேலை, திருமணம் போன்ற காரணங்களால் எனக்கும், ஷாலினிக்கும் இருந்த தொடர்பு துண்டித்தது.
இந்நிலையில் என் மனைவிக்கும் அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு சமூக வலைத்தளம் மூலம் ஷாலினியுடன் மீண்டும் ‘தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட நான் ஷாலினி குடியிருக்கும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கினேன்.
ஷாலினியின் கணவருடன் பழகி நண்பனாக்கிக்கொண்டேன். தன்மூலம் ஷாலினியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தேன். ஷாலினியை அடைவதற்கு எனது மனைவியும், ஷாலினியின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என் மனைவி என்னிடம் தகராறு செய்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா போலிசில் மர்மசாவு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஷாலினி கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு மற்றும் செல்போன் வாங்கினேன்.
அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், போலீசார் ஷாலினியின் கணவரை கைது செய்து விடுவார்கள் என நினைத்தேன்.
ஆனால் கடைசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நானே போலீசில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கோகுல் கூறியிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
சினிமா கதை மிஞ்சும் வகையில் கோகுல் கொலையையும், வெடிகுண்டு மிரட்டலையும் சாமர்த்தியமாக அரங்கேற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum