Top posting users this month
No user |
Similar topics
தாய்லாந்து கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் விடுதலை
Page 1 of 1

தாய்லாந்தில் குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவரையும் அந்நாட்டு பொலிசார் இன்று விடுதலை செய்தனர்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்து கோவிலின் வளாகத்தில் கடந்த மாதம் 17ம் திகதி வெடிகுண்டு வெடித்தது.
இதில் 27 பேர் மரணமடைந்தனர், 80 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மின்பூரி மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் ஒரு வீட்டின் அறையில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் இருப்பதை போலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த வீட்டின் மற்றொரு அறையில் தங்கியிருந்த 2 இந்தியர்களை அவர்கள் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையின்போது அவர்கள் இருவரும் உரிய ஆவணங்களுடன் தாய்லாந்து நாட்டில் வந்து தங்கியுள்ளதும், குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இரண்டு இந்தியர்களையும் போலிசார் இன்று விடுதலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன்
» சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் விடுதலை
» சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum