Top posting users this month
No user |
வட, கிழக்கை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் பதவியை வகிக்கவும் உரிமையுண்டு! கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமையானது, சட்டரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ பிரச்சினைக்குரியதல்ல என கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரதேசம் இலங்கையில் ஒரு பகுதி என்பதை நாம் ஏற்றுக்கொள்வோமாக இருந்தால், இந்த பிரதேசத்தில் இருந்து அரசியலுக்கு வரும் அமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மாத்திரமல்ல, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த 47 லட்சம் பேரின் உரிமைகள் இல்லாமல் போயுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தன் தமிழர் என்பதாலோ அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதாலோ அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியது தவறு என்று நாங்கள் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் தலைவர் ஒருவர் 1977 ஆம் ஆண்டு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றார்.
77 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 168 நாடாளுமன்ற ஆசனங்களில் 140 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது.
அந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களை கைப்பற்றியது. இதனடிப்படையின் அதன் தலைவராக இருந்த ஏ. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் 5 வருடங்கள் அவர் அந்த பதவியை வகித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum