Top posting users this month
No user |
மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டதால் விரக்தியில் மணப்பெண் தற்கொலை
Page 1 of 1

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டதால் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை லாஸ்பேட்டை மேஜர் சரவணன் நகரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி வினிதாவுக்கும், கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான மணிகண்டன் என்கிற காக்கா மணிக்கும் (25) திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மணிகண்டனின் பெற்றோர், புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ரௌடிக் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
புகார் தெரிவித்துவிட்டு வெளியே வந்தபோது வினிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது இதுகுறித்து, லாஸ்பேட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum