Top posting users this month
No user |
காதல் மனைவியை பார்க்க சென்ற வாலிபர்: திருடன் என நினைத்து அடித்த பொது மக்கள்
Page 1 of 1

சேலத்தில் காதல் மனைவியை அழைத்து செல்ல வந்த வாலிபரை திருடன் என நினைத்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
சேலத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் தோட்டத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதி மக்கள் அவரிடம் விசாரித்த போது தனது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அந்த வாலிபர் ஓட ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து அவரை திருடன் என நினைத்த பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்த ஆரம்பித்தனர்.
5 கி.மீ தூரம் வயல் வழியாக ஓடிய அந்த நபர் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் பொலிசாருக்கு போன் செய்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வாடகை வாகனத்தில் பொலிசார் சென்றபோது, வாலிபர் அந்த வாகனத்தில் ஏறியுள்ளார்.
அந்த வாலிபர் பொலிசார் வாகனத்தில் ஏறியதை பார்த்த மக்கள், திருடனை காப்பாற்ற பொலிசார் முயல்வதாக எண்ணி வாகனத்தை சிறை பிடித்துள்ளனர்.
மேலும், காரில் இருந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிடிபட்ட வாலிபர் திருடன் என்றால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
காவல் நிலையத்தில் விசாரணையில், சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (26) என்று தெரிய வந்தது.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 21ம் திகதி அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கணேசன் என்பவரது மகளுமான பிரியதர்ஷினி என்பவரை நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.
மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்தன்று தாலியை அறுத்து எரிந்து விட்டு பிரியதர்ஷினியை அழைத்து சென்று விட்டனர்.
பின்னர் அவரை யாருக்கும் தெரியாமல் ஓமலூர் அருகே பிரியதர்ஷினியின் பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்தனர்.
நேற்று என்னுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை அவருடைய தம்பி பார்த்து விட்டு செல்போனை பிடுங்கி கொண்டு கண்டித்தார்.
இதனால் அவரது தாத்தா செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்ட பிரியதர்ஷினி தன்னை அழைத்து செல்லும் படி கதறி அழுதார்.
நான் இங்கு வந்த போது திருடன் என்று சந்தேகப்பட்டு பொதுமக்கள் துரத்தியதால் தப்பி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum