Top posting users this month
No user |
பதார்த்த வகை
Page 1 of 1
பதார்த்த வகை
சமைத்த துவரம் பருப்பு:
துவரம் பருப்பை வெந்நீரில் இட்டு சமைத்து பசுவின் நெய்யுடன் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் ஒரு பிடி அன்னத்துக்கு ஒரு பிடி சதை வளரும்.
நெய்யும் துவரம் பருப்பும்:
உணவு ஆரம்பத்தில் நெய் சேர்த்து உண்பதால் துவரம் பருப்பின் உஷ்ணம், குடல்விருத்தம், பழைய மலபந்தம், பித்தம், வாத கப தொந்தரவு, நீங்காத சொறி ஆகியவை நீங்கும். அதிக ஞாபகசக்தி, வனப்பு, கண்ணுக்கு ஒளி உண்டாகும்.
பொரியல்:
உறைப்பு சுவை அதிகம் இருக்கும் பொரியல் கபத்தை தரும். புளிச்சலை மிகுந்த பொரியல் மந்தம் மற்றும் சேற்றுப்புண் நோயையும், காய்ச்சலையும் போக்கும்.
வறுவல்:
இள வறுப்பாக வறுத்த பதார்த்தத்தினால் மந்தமும், கருகும்படி வறுத்தால் வாத பித்த கப நோயும் உண்டாகும். இவற்றில் இரண்டுக்கும் நடுத்தரமாக வறுத்த கறிகள் தொந்த வாதத்தை நீக்குவதோடு கப சம்பந்தப்பட்ட அனைத்து நோயையும் நீக்கும்.
பச்சடி:
புளி சுவையுள்ள பச்சடியால் பித்த பிரமேகமும், உரைப்பு பச்சடியால் சிலேஷ்ம வாதமும், இனிப்பு பச்சடியால் அரோசகமும் நீங்கும். துவர்ப்புள்ள பச்சடியால் வாதம் உண்டாகும்.
துவையல்:
புளியாரை முதலிய புளிப்பிலை துவையல் பித்த கோபத்தை நீக்கும். வெறும் புளித்துவையல் இரத்தத்தைமுறிப்பதால் நன்மை இல்லை. புளி சேர்க்காத துவையல் நன்மையாகும். அதிக காரம் சேர்த்த துவையல் பசியை உண்டாக்குவதால் அது மிகவும் சிறந்தது.
குழம்பு:
உறைப்புள்ள குழம்பால் வாதம் ஏற்படாது. அவ்வாறு இல்லாத குழம்பால் வாத உண்டாகும். காரத்தோடு நீர்க்க வைத்த குழம்பால் வாத, பித்த, கப நோய்கள் விலகும்.
துவரம் பருப்பின் ரசம்:
வாழை, பலா, மா ஆகிய முப்பழங்களையும், பால், நெய் கறிகளையும் அதிகம் சாப்பிட்டால் உடனே அக்கினி மந்தம் உண்டாகும். அதை நீக்குவதற்கு துவரம் பருப்பு கட்டிறுத்த நீரில் மிளகு, வெள்ளைப்பூண்டு ஆகியவை சேர்த்து ரசம் வைத்து உணவுடன் சாப்பிட்டால் அந்த அக்கினி மந்தமும், வாத பிரமேகமும் நீங்கும்.
காடைச்சாறு:
காடைச்சாறு சந்நிபாத தோஷங்கள், கிரகணி, வயிற்று நோய், சுரம், சுவாசம், காசம் ஆகியவை போகும். இளைத்த உடல் பெருக்கும். ஆயுள் வளரும்.
கொள்ளுச்சாறு:
சூடுள்ள கொள்ளு சாறால் இளைத்த உடல் பெருக்கும். ஸ்தம்பம் போல் உரமாகும். வாதம், பித்த கோபம், கிரகணி, சுவாசம், காசம், விழியை பற்றிய விரணம் முதலிய நோய்கள், ஜலதோஷம் ஆகியவை நீங்கும்.
ஊறுகாய்:
உணவுடன் சேர்த்து சாப்பிடுகின்ற பல வகையான ஊறுகாய்களால் மனச்சோர்வு, தொந்தம், வாதம் ஆகியவற்றை அகற்றும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum