Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிர்வாணத்தை ஆடையாக பூண்டு மரண பயமின்றி வாழும் ”அகோரிகள்”

Go down

நிர்வாணத்தை ஆடையாக பூண்டு மரண பயமின்றி வாழும் ”அகோரிகள்” Empty நிர்வாணத்தை ஆடையாக பூண்டு மரண பயமின்றி வாழும் ”அகோரிகள்”

Post by oviya Thu Aug 27, 2015 3:04 pm

பல்வேறு இனம், மொழி, மதம் போன்ற எண்ணற்ற கூறுகளால் இந்திய மக்கள் பல குழுக்களாக பிரிந்திருந்தாலும் “இந்தியா” என்ற உணர்வின் கீழ் ஒரு மாபெரும் தேசமாக ஒன்றினைந்து வாழ்ந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த இந்தியாவில் மதங்களின் பெயரிலும் மக்களின் நம்பிக்கையின் பெயரிலும் பல்வேறு பழக்க வழக்கங்கள் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

அவ்வாறான இந்தியாவின் எண்ணற்ற மர்மங்களில் ஒன்று தான் கங்கை கரைகளில் வாழ்ந்து திரியும் ”அகோரிகள்”.

அகோரிகள் என்பவர்கள் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் இடங்களில் வாழும் சைவ சமய சாதுக்கள் ஆவர்.

காசி நகரத்தில் அதிகம் காணப்படும் இவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தில், ”அழிக்கும் கடவுளாக” வணங்கப்படும் சிவனின் கோர ரூபமான பைரவரையும், வீரபத்திரரையும் வழிபடுகின்றனர்.

இவர்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் சராசரி மனித வாழ்கைக்கு அந்நியமாக உள்ளதால் இவர்கள் மக்கள் மத்தியில் தனித்து தெரிகின்றனர்.

மரணம் பற்றி எவ்வித பயமும் இல்லாத அகோரிகள் யாரையும் துன்புறுத்தாத சாதுக்கள் என்று கூறப்படுகின்றனர்.

இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சிறுவயதிலேயே சிவபெருமானுக்கு நேர்ந்து விடப்பட்ட குழந்தைகளாக காசி, கயா, வாரணாசி, ரிஷிகேஷ் ஆகிய தலங்களில் உள்ள மடங்களில் விடப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் கங்கை நதியில் விடப்படும் சடலங்களில் இருந்தும் காசி உள்ளிட்ட இடங்களில் எரியூட்டப்படும் உடல்களிலிருந்தும் மண்டையோடுகளை சேகரித்துக் கொள்கிறார்கள்.

அந்தக் கபால ஓடுகளை தண்ணீர் அருந்தவும், திருவோடாகவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலும் 2 முதல் 20 பேர் கொண்ட குழுவாக வாழக்கூடிய இவர்களில் பெரும்பாலும் 90 சதவிகிதம் பேருக்கு மதுப்பழக்கம், கஞ்சா புகைப்பது, மது அருந்துதல், போதைப் பழக்கம் ஆகியவை உள்ளது.

அகோரிகளில் 50 சதவிகிதத்தினர் நிர்வாணமாகவும், மீதமுள்ளவர்கள் அரை நிர்வாணமாகவும் வாழும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

ஆடையணியும் அகோரிகளில் பலர் வெள்ளுடையையும், கால பைரவர் என்பதைக் குறிக்கும் விதமான கருப்பு வண்ணம் மற்றும் காவி ஆகிய நிறங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அகோரிகள் நெருப்பில் வேகும் மனித உடல் பாகங்களை எடுத்து உண்பதாக கூறுவதை பலரும் கேட்டிருப்போம். ஆனால் அகோரிகளில் 3 சதவிதத்தினருக்கும் குறைவானவர்களே இவ்வாறு மனித உடல் பாகங்களை உண்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அகோரிகள் இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு கொள்வார்கள் என்றும் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.

அளவில் மிக குறைவாகவே உள்ள பெண் அகோரிகளை பார்வதியின் மறுஉருவமாக பக்தர்கள் கருதுவதால் அவர்களை ‘துர்க்கா ஜி” என்ற பெயரில் அழைக்கின்றனர்.

அகோரிகள் பெரும்பாலும், சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டு, பிச்சை எடுப்பவர்களாக கருதப்பட்டு வந்தாலும், வட இந்தியர்கள் அவர்களை ”பாபாஜி” என்று அழைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதை வரம் போல கருதுகின்றனர்.

அகோரிகள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்றுகூடலாக கருதப்படும் ”கும்பமேளா” என்ற பிரம்மாண்ட விழா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறுகிறது.

இந்த மாபெரும் திருவிழாவின்போது உடல் முழுவதும் திருநீறு பூசிய பல்லாயிரக்கணக்கான அகோரிகள், நதியில் புனித நீராடுவதை பார்க்கும் உலக மக்கள் இந்தியாவின் தொன்மையை பார்த்து வியப்பில் ஆழ்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum