Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செடி வகை

Go down

செடி வகை                 Empty செடி வகை

Post by oviya Tue Aug 25, 2015 6:42 am

ஆவாரை:
சர்வ பிரமேக மூத்திர ரோகங்களையும், ஆண்குறி எரிவதையும் குணமாக்கும்.

பொன்னாவாரை:
சரும வெடிப்பு, சொறிந்தால் சருமத்தூள் சிந்துதல், மேகப்புடைகள், கண்டு கண்டாக தடித்தல், நமைச்சல், காணாக்கடி ஆகியவை போகும்.

நீர்ப்பலா:
மாந்தம், கணைச்சூடு, வயிற்று இரைச்சல், சொறி, சிரங்கு, அதிமூத்திரம் ஆகியவை நீங்கும்.

குன்மக்குடோரி:
ஆற்று ஓரங்களில் இருக்கும் குன்மக்குடோரி, செடியால் சூலை, சுவாசம் , இருமல், குன்மரோகம் ஆகியவை போகும்.

விடத்தேரி:
வெப்பத்தை உடைய விடத்தேரியின் செடிக்கு முளையை உண்டாக்குகின்ற மூலம், வயிற்று பிடுங்கலையுடைய இரத்த கிராணி, அதிதாகம் ஆகியவை அகலும்.

தகரை:
படர்தாமரை, சொறி, அக்கினி, மாந்தம், அஸ்திசுரம் ஆகியவற்றை நீக்கும்.

நின்றால் சிணுங்கி:
இந்த செடியானது சர்ப்ப விஷத்தை நீக்கும். பெண் வசியத்துக்கு உதவும்.

நிலம் புறண்டி:
இந்த செடியினால் அற்ப விஷ சுரங்கள் அகலும். புருச வசியத்துக்கு உதவும்.

உரலாமணக்கு:
சரீர வலி, குத்தல், குன்மம், முளை மூலம், சுழல் வாத விரணம், இரத்த மேகம் முதலிய சில மேகங்கள், எலி விஷம், சில்விஷம், வயிற்று வலி, பீலிக ரோகம் ஆகியவை நீங்கும். இது விரோசனத்தை உடையது.

சணப்பு:
கசப்பும், காரமும் உள்ள சணப்பு செடிக்கு பித்த கோபமும், வாத ரோகங்களும் நீங்கும். இளம் கர்ப்பம் கரையும்.

மாமாலை:
பாண்டு ரோகம், சரீரத்தில் படர் சோகை, நீராம்பல் ரோகம் ஆகியவைகளை நீக்கும். அதிகமாக நீரை வெளிப்படுத்தும்.

கோடகசாலை:
கரம், வாதப்பிரமேகம், சிரங்கு, தோல் நோய்கள், விரணம், பித்த வாத தொந்தம், ஜிக் வாகண்ட்

வட்ட கிலுகிலுப்பை:
செடியானது சொறி, கிரந்தி, கண்டமாலை, பற்பல சோகை, விரணங்கள், அக்கினி மந்தம் இவற்றை நீக்கும்.

வெள்ளை கிலுகிலுப்பை:
மலையில் முளைக்கின்ற வெள்ளை கிலுகிலுப்பையானது தாவர சங்கம விஷங்களையும் விஷ சந்நிபாத ரோகத்தையும் நீக்கும்.

சந்திரகாந்தி:
பித்த எரிவும், நீர்க்கடுப்பும், தொப்புள் வலியும் நீங்கும்.

சூரியகாந்தி:
சகனா வர்த்த வாத ரோகமும், சகல தோஷமும், நீரேற்றமும் நீங்கும்.

பேயகத்தி:
இதை சீமையகத்தி என்றும் கூறுவார்கள். இதனால் ரசதாது கிருமிகளும், உஷ்ண சொறியும், தினவும் நீங்கும். இரத்த நரம்பு பிரகாசிக்கும்.

ஈச்சுரமுலி:
விஷ சோபை முதலிய சோவைகளும் சந்நிகளும் பல விஷங்களும் நீங்கும். உயரமான தொனி உண்டாகும்.

நிலவிளா:
வெதும்புகின்ற கணச்சுரம், அதிதாகம், பித்த கோபம், மாறாப்பிரமேகம், விரண சுரம் இவை நீங்கும்.

சங்கங்குப்பி:
அரைக்கடுவன், சிரங்கு, விசர்ச்சிகா தோல் நோய், வாத பிரமேகம், குண்டாலக்க்கட்டி, வெள்ளை, தவளை சொறி, விரணம், கீல்வீக்கக்குத்தல், மகாவாதம், சிலேஷ்ம தோஷம், வறட்டு இருமல், சர்ப்பம் விஷம், இரத்த கிருமி, கர்ப்பத்தில் உண்டாகிய கருங்கிரந்தி ஆகியவை போகும். இது பித்தாதிக்கம் உடையது.

கறிமுள்ளி:
நெஞ்சில் கோழைக்கட்டு, சிலேத்ம சுரம், தமகசுவாசம், காசம் முதலியயை நீங்கும்.

செம்முள்ளி:
கபப்பெருக்கம், கண மாந்தம், சுவாசம், குழந்தைகளுக்கு உண்டாகின்ற சுரதோஷம் ஆகியவை குண‌மாகும்.

கண்டங்கத்திரி:
வெப்பமும், கார்ப்பும் உள்ள கண்டங்கத்திரியினால் காசம், சுவாசம், அக்கினி மந்தம், சீதச்சுரம், சந்நிபாதம், ஏழு வகை தோஷங்கள், வாத ரோகங்கள் தீரும்.


தேட்கொடுக்கு:
நமைச்சல், பழய விரணம், கடுவன், கண மாந்தம், சில்விஷ்ங்கல் வீல‌கும்.

பெருந்தேட்கொடுக்கு:
சுடுகாடு முட்டான் என்னும் பெருந்தேட்கொடுக்கு செடியினால் ரசதாதுவை பற்றிய அணுக்கிருமி, விரணக்கிரந்தி, மேகப்புண், கருங்கிரந்தி முதலியன நிவர்த்தியாகும்.

சிறுதேட்கொடுக்கு:
நமைச்சிரங்கு, விரண கரப்பான், கீல் வீக்கம், கொடுக்கு மாந்தம், ஒழுக்கு பிரமேகம், பித்த வெள்ளை, அஸ்திசிராவம் முதலியன குணமாகும்.

நிலவேம்பு:
வாதசுரம், மேகநீர் கோவை, சுரதோஷம், பித்த மயக்கம் தீரும். தெளிவை உண்டாக்கும்.

சிவனார் வேம்பு:
ஆகந்துகவிரணம், நாட்பட்ட சரும நோய்கள், ராஜ பிளவை, சர்ப்ப விஷம், மகாவாதம், அக்கினி மந்தம் இவை அனைத்தும் நீங்கும். அழகு உண்டாகும்.

நீர்முள்ளி:
பாண்டு, குளுப்பை, சக்கோவை, மூத்திர சிக்கல், வீக்கங்கள் ஆகியவை விலகும்.

பெருமருந்து:
வாதாதி முத்தோஷம், சுரம், நமைக்கிரந்தி விஷம், தினவு, தேமல், மேகப்படை ஆகியவை நீங்கும்.

ஊமத்தை:
நாய்க்கடி புண், குழி விரணம், வித்திரி கட்டிகள், நஞ்சு, திரிதோஷம் ஆகியவை நீங்கும்.

கரு ஊமத்தை:
கசப்புடைய கரு ஊமத்தை சுக்கிலத்தையும், பாத ரசத்தையும் கட்டும். உடலுக்கு அழகை உண்டாக்கும். பெருவியாதி, வியர்வை தினவு, மனச்சோர்வு, சுரம் ஆகியவை நீங்கும்.

பொன் ஊமத்தை:
விரணக்கிரந்தி, நாட்சென்ற கிராணி, அதிசாரம், பித்த விஷ சுர‌ங்கள், பேதி ஆகியவை நீங்கும்.

மருள் ஊமத்தை:
குளிர் சுரம், சரீரத்தில் உண்டாகும் நீர்க்கோவை அற்ப வீரியம், அக்கினி மந்தம், வாத தோஷம் இவை விலகும்.

நிலக்குமிழ்:
விழி சொருகுதல், வாதக்கடுப்பு, மந்தம், அதிகொட்டாவி, சலமந்தப்பேதி, சீதளம் ஆகியவை போகும்.

நிலத்துத்தி:
ஆரம்ப மூல ரோகத்தையும், வித்திரி கட்டிகளையும் போக்கும். கருவங்கத்தை பஸ்பபாக்கும்.

பெரும் பீளை:
பாஷாண பேதி என்னும் பெரும் பீளை செடிக்கு மிகுந்த சோபையும், பைசாசம் முதலிய சங்கை தோஷமும், கல்லடைப்பு முதலிய சில நோய்களும் தீரும்.

சிறுபீளை:
தேகம் வெளுத்து போதல், அசிர் கபரோகம், வாத மூத்திர கிரீச்சுரம், திரிதோஷம், மூத்திரச்சிக்கல், அஸ்மரி, அந்திர பித்த வாதம், சோணித வாதங்கள் ஆகியவை தீரும். இதை கற்பேதி என்றும் கூறுவர்.

பல்லிப்பூண்டு:
சர்ப்ப விஷம், சுரதோஷம், வாத பித்தம், தொந்தம், பல்வலி ஆகியவை தீரும். பாஷாணமும் தாளகமும் சுத்தி ஆகும்.

தாணிப்பூண்டு:
தாணி பூண்டினால் இரத்த பிரமேகமும் குணமாகும்.

பொரிப்பூண்டு:
அக்கினி கீட கிரந்தி, மேகம் ஆகியவை நீங்கும்.

தலைச்சுருளி:
உடல் வெளுப்பு, படர் தோல் நோய், இருதய நோய், ஆகந்துக சோபை முதலியன தீரும்.

கருப்பு மணத்தக்காளி:
மனச்சோர்வு வெப்பம், சுரசாத ரோகம், பாத தோஷம் ஆகியவை நீங்கும். பாலர் சிகிச்சைகளுக்கு இது உதவும்.

சிவப்பு மணத்தக்காளி:
கந்ததாளி விரணம், உட்சுரவேகம், வாத கப தொந்தம் ஆகியவற்றை போக்கும்.

நல்வேளை:
சிரஸ்தாப ரோகம், சரீர நோய், குடைச்சல், சீதளம், மார்பு வலி, வாத தோஷம், கபரோகம், வீக்கம் இவை தீரும். பசியும், சூடும் பித்த ஆதிக்கமும், ஜிக்வாகண்ட் ரோகமும் உண்டாகும்.

நாய் வேளை:
வாத பொருமல், தேகக்கடுப்பு, குத்தல், கர்ணநாத ரோகம், சிலேத்ம பீனிச நோய் ஆகியவை குணமாகும்.

கொள்ளுக்காய் வேளை:
இதனால் வாதாதிக்கமும், நாவறட்சியும், தந்தமூல நோயும், கொள்ளு வடிய செய்யும் கபமும் குணமாகும்.

கல்லுருவிப்பூண்டு:
பல கட்டிகள், இரத்தத்தடிப்பு, கிரந்தி, பிரமேகம், சர்ப்ப விஷம் ஆகியவை குணமாகும். இரும்பை சுத்தி செய்யும்.

எரிசாலை:
தனுர்தம்ப வாதமும், கீல் குத்தலும், வாத கோபமும் நீங்கும்.

குதிரை குளம்படி:
குளம்படி பூண்டுக்கு அஸ்வவாதமும், சந்நியும், தினவும் விலகும். இதை குளித்திப்பூண்டு என்றும் கூறுவர்.

சுளுக்கு நாயகம்:
சுளுக்கு நாயகப்பூண்டுக்கு ஏழு தோஷங்களும், சுர மெலிவினால் வந்த தேக சுளுக்கு, சுபாவ கை, கால்களின் சுளுக்கு, இரத்தம் கட்டிய கறடுகளுக்கு மேலுண்டாகிற இரத்த தடிப்பு முதலியன போகும்.

கிரந்தி நாயகம்:
கிரந்தி நாயகப்பூண்டினால் சீதளம், சர்ப்ப விஷம், கண் நோய், பைசாசம் முதலான சங்கை தோஷம், உள்புண், கிரந்தி ஆகியவை நீங்கும்.

பிளவை கொல்லிப்பூண்டு:
சிறு சிரங்கு, கிரந்தி, ஒழுங்கு பிரமேகம், உள்மாந்தை, ராஜ பிளவை கட்டி முதலியன நீங்கும்.

மலைதாங்கிப்பூண்டு:
மலைதாங்கிப்பூண்டுக்கு சகல வாத ரோகங்கள், சுரம், வாத கப தொந்தம், கர்ணசூலை, தேகப்பாரிப்பு, சிலேத்தும கோபம், அதிகாரம், சிரங்கு இவை நீங்கும். இது மாமிச தாதுவை விருத்தி செய்யும். இதற்கு வெற்பேந்தி என்னும் மற்றொரு பெயரும் உண்டு.

குடியோட்டிப்பூண்டு:

பெருவிரணம், கரப்பான், சிறு சிரங்கு, சில்விஷங்கல், சலப்பிரமேகம், சர்ப்ப விஷம், தந்த ரோகம், காசம், மேக வாயு ஆகியவை தீரும். இதை பிரம்மதண்டு என்றும் கூறுவர்.

ஆடுதீண்டாப்பாளை:
மலாசயக்கிருமி, சிலந்தி பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், சர்வவாத ரோகங்கள் ஆகியவை நீங்கும். பலமும் சுக்கில விருத்தியும் உண்டாகும்.

கிழிமீட்டான்:
குழி மீட்டான் பூண்டு கண மாந்தத்தையும், உள் வெப்பத்தையும் போக்கும். தாய்ப்பாலை சுரக்க செய்யும்.

செருப்படை:
வாத கோபம், மந்தாக்கினி, வெள்ளை வீழ்தல், ஆகிருஷ்ண ஸ்தம்பன வாதம், சூலை, குன்மம் ஆகியவை நீங்கும்.

கல்தாமரை:
மலையில் முளைத்த கல் தாமரை சுக்கிலத்தையும், பலத்தையும் விருத்தியாக்கும். தோல் நோயை நீக்கும். காரீயத்தை செம்பாக்கும்.

கஞ்சாங்கோரை:
மாந்தபேதி, அக்கினி மந்தம், கணச்சூடு, பிரமேகம், காசம், ஆசன நமைச்சல், சுரம் நீங்கும். இதை நாய்த்துளசி என்றும் கூறுவர்.

கீழ்வாய்நெல்லி:
ஆமக்கட்டு, அக்கினி கீட விஷம், கண் நோய்கள், பூதம் முதலிய சங்கை தோஷம், இரத்தாதி சாரம், மதுபிரமேக மூத்திரம், காமாலை, சப்ததாதுகத சுரம், சரும தாது வெப்பம், நாட்பட்ட மேகப்புண் ஆகியவை நீங்கும்.

மயிர் மாணிக்கம்:
வளர்கின்ற மேகமும், வெள்ளையும், ஷயமும் நீங்கும். இதில் முறைப்படி சூதம் சேர்த்து சாப்பிட்டால் விரணம் ஆறும்.

துளசி:
கார்ப்பும், வெப்பமும் உள்ள துளசியினால் கபதோஷம், வயிறு உளைதல், அஸ்திதாதுகத சுரம், அருசி இவை போகும்.

செந்துளசி:
சிவப்பு துளசியால் விஷம், கபாதிக்கம், அக்கினி கீட விஷம், திரி தோஷத்தால் உண்டாகின்ற பற்பல தோஷங்கள் குணமாகும்.

கருந்துளசி:
காசம், தொண்டைக்குள் குறுகுறு என்னும் ஒரு சத்தம், இரைப்பு, கிருமி, நீர்க்கோவை இருமலால் வரும் கேவல், மார்புச்சளி, சுரம், குத்தல், விஷம், சந்நிபாதம் ஆகியவை தீரும்.

நிலத்துளசி:
வாதசுரம், பித்த நோய்கள், கணச்சூடு, மந்தம், பித்த சூட்சை, குளிர் சுரம், தாய்ப்பாலால் உண்டாகும் மந்தம் முதலியன தீரும்.

கல்துளசி:
தீச்சுரம், வித்திரிக்கட்டி, நீர் வண்டு முதலிய விஷம், கோழையை தள்ளிகின்ற கபகாசம் தீரும்.

முள்துளசி:
முள் துளசியினால் எலி விஷம், வெட்டு புண், அற்ப விஷம் ஆகியவை தீரும்.

கழுதைத்தும்பை:
அரையாப்பு கட்டி, வாத நோய், இரத்தமும், சீதமும் கலந்து விழுதலால் உண்டாகும் கடுப்பு குணமாகும்.

நெய்ச்சட்டிப்பூண்டு:
நெய்ச்சட்டி பூண்டுக்கு சகதேவி, தேவகந்தம் என்னும் பெயர்களும் உண்டு. இதனால் வீரிய விருத்தி, கண் ஒளி, அழகு உண்டாகும். பித்த மேகம், வெள்ளை உட்சூடு, தாகம், பித்த கோபம், ரசகந்தகத்தால் உண்டான வாய்ப்புண், அழற்சி, வாந்தி குணமாகும். வேப்பெண்ணெய் உண்டான கசப்பை விலக்கும்.

எழுத்தாணிப்பூண்டு:
மலக்கட்டு, குடலின் சீதளம், கிரகணி, கரப்பான், கிரந்தி புடை ஆகியவை தீரும்.

கொட்டைக்கரந்தை:
வெள்ளை ஒழுக்கு பிரமேகம், சொறி, சிரங்கு, கரப்பான் இவை நீங்கும். வெளி வராமல் தங்கிய மலத்தை வெளிப்படுத்தும்.

பேய்மிரட்டி:
இதற்கு வெதுப்படக்கி என்னும் பெயரும் உண்டு. கண மாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம் ஆகியவை தீரும்.

குருவிச்சிப்பூண்டு:
பெருவியாதி, மலடு, சிலேஷ்மம், மேகம், கரப்பான் விஷ மாந்தம், சீதரத்தக்கிரகணி தீரும். இதை குருவிஞ்சிப்பூண்டு என்றும் கூறுவர்.

சிவகரந்தை:
மணமுள்ள சிவகரந்தையானது வமனம், விந்து, நஷ்டம், அருசி, வாதம், கரப்பான், வாதாதி தொந்தம், காசம், அக்கினி மந்தம் இவற்றை நீக்கும். சடராக்கினியையும், வனப்பையும் உண்டாக்கும்.

வெள்ளறுகு:
குன்ம, வாதப்பிணி, வாதக்குமட்டல், விருந்தி, கீல் பிடிப்பு, நரம்புகளை பற்றிய கிரந்தி, சிறு சிரங்கு ஆகியவை குணமாகும்.

ஓரிலைத்தாமரை:
எலுமிச்சங்காய் அளவு அரைத்து அரை ஆழாக்கு பசு மோரில் இரண்டு வேளை நாற்பது நாட்களுக்கு கொடுத்தால், தாய்ப்பால் இல்லாதவர்களுக்கு சுரக்கும். வாதம், மேகம் ஆகியவை குணமாகும்.

அந்தரத்தாமரை:
இதை ஆகாயத்தாமரை என்றும் கூறுவார்கள். இதனால் அழுகின ரணம், தோல் நோய், கரப்பான், மார்புக்குள் கட்டுகின்ற கிருமிக்கூடு முதலிய நோய்கள் தீரும்.

பற்பாடகம்:
கப, வாத சுர, பித்த தாக ரோகம், உள் மாந்தம், பித்த தோஷம் ஆகியவை குணமாகும். விழிக்கு குளிர்ச்சி உண்டாகும்.

திருநீற்றுப்பச்சிலை:
இதை உருத்திரச்சடை என்றும் கூறுவர். இதனால் கப வாந்தியையும், சுரத்தாலாகிய உதிர வாந்தி, பித்த சுரம், அரோசகம் ஆகியவை குணமாகும்.

மாசிப்பத்திரி:
புளிப்பும், துவர்ப்பும் உள்ள மாசிப்பத்திரியானது வாத நோயையும், உஷ்ணத்தையும், ஐவகை வலியையும் போக்கும்.

மருக்கொழுந்து:
கைப்பும், காரமும், உஷ்ணமும் உள்ள மருவானது நேத்திரப்படலம், கபதோஷம், உட்சூடு இவற்றை நீக்கும். மருவின் குணத்தையுடைய கொழுந்தானது மிகுந்த பசியையும், பலத்தையும் கொடுக்கும்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum