Top posting users this month
No user |
கோடை கால சாலட்
Page 1 of 1
கோடை கால சாலட்
செய்முறை:
மருத்துவ குணங்கள்:
- தர்பூசணி மற்றும் முலாம் பழம் இரண்டையும் தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பழத்துண்டுகளை 5 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.
- மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பாத்திரத்தில் எலுமிச்சை பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்றாக போட்டு கலந்து வெட்டி வைத்துள்ள பழங்களின் துண்டுகளை போட்டு கலந்து பரிமாறவும்.
மருத்துவ குணங்கள்:
- முலாம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் அதிக சூடு குறையும்.
- முலாம் பழத்தில் ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
- மேலும் வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஏ” அதிகம் இருப்பதால் புற்று நோய், இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. பக்கவாதம் நோய் வராமல் தடுக்கிறது. செரியாமை, வாய்வு மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
- இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிது.
- மேலும் கர்ப்பமான பெண்கள் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பழமாகும். பெண்கள் அதிகமாக சாப்பிட கூடிய பழமாகும். உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பழம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum