Top posting users this month
No user |
Similar topics
சுவாசத்தை எளிதாக்கும் குங்குமப்பூ!
Page 1 of 1
சுவாசத்தை எளிதாக்கும் குங்குமப்பூ!
நோய் எதிர்ப்பு சக்திக்கு......
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
உடற்சூட்டுக்கு.........
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum