Top posting users this month
No user |
Similar topics
தோல்வியடைந்தவர்களை நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டாம்: தேசிய அமைப்புக்களின் ஒன்றியம்
Page 1 of 1

தோல்வியடைந்தவர்களை நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டாம் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போதியளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது தோல்வியைத் தழுவிய சில முக்கிய உறுப்பினர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இவ்வாறு தேசியப் பட்டியல் ஊடாக தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரியுள்ளது.
தோல்வியடைந்த எந்தவொரு உறுப்பினரையும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த வழிமுறையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பின்பற்ற வேண்டுமென ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் கெவிந்து குமாரதுங்க ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
மக்கள் தெரிவு செய்து சிலரை தோற்கடித்துள்ளனர். நாடாளுமன்றம் செல்லக் கூடாது எனக் கருதியே இவ்வாறு மக்கள் தோற்கடித்துள்ளனர்.
இவர்களை மீளவும் வேறு வழியில் நாடாளுமன்றம் செல்ல அனுமதிப்பது மக்களின் அபிலாசைகளை சீர்குலைப்பதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி டி சொய்சா, நந்திமித்ர ஏக்கநாயக்க உள்ளிட்ட சிலர் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தனர்.
இவர்களை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோல்வியடைந்தவர்களை நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டாம்: தேசிய அமைப்புக்களின் ஒன்றியம்
» தேசிய நிறைவேற்று சபைக்கு நாங்கள் செல்ல மாட்டோம்: ஜே.வி.பி
» மின்சார நாற்காலிக்கு செல்ல அஞ்சாதவர்கள் நீதிமன்றம் செல்ல அஞ்சுகின்றனர்: லக்ஸ்மன் கிரியெல்ல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum