Top posting users this month
No user |
Similar topics
கோலா தேங்காய்ப்பால் பிரியாணி-செய்வது எப்படி?
Page 1 of 1

கோலா தேங்காய்ப்பால் பிரியாணி:
COLA COCONUT MILK BIRIYANI
தேவை:
சோயா உருண்டைகள், பொட்டுக் கடலை, இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, லவங்கம்,கொத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு.
செய்முறை:
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்துப் பிழிந்து, மீண்டும் அலசவும். தண்ணீரை நன்கு பிழிந்து, மீண்டும் அலசவும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். நறுக்கிய சோயாவுடன், இஞ்சி, பூண்டு, மிள்காய், தேங்காய்த் துருவலுடன் சீரகம் ,பட்டை லவங்கம், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் பொட்டுக் கடலை மாவையும், , பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் கலந்து, நன்கு பிசைந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு , மிதமான சூட்டில் பொந்நிறமாகப் பொறித்து எடுத்தால், கோலா உருண்டை தயார்.
பிரியாணிக்குத் தேவையானவை:
பசுமதி அரிசி-1 டம்ளர், தேங்கய்ப் பால்-2 டம்ளர்; பச்சை மிளகாய்-5; பட்டை, லவங்கம், ஏலக்காய்; , முந்திரி-தலா-3; வெங்காயம், தக்காளி-தலா-2; இஞ்சி பூண்டு விழுது-2 தேக்கரண்டி; மஞ்சள் தூள், நெய் தலா- 1 தேக்கரண்டி, புதினா, கொயத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீள்வாக்கில் மெலிதாக நறுக்கவும். அரிசியை சுத்தம் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் லேசாக வறுத்து எடுக்கவும். ‘குக்கரில்’ நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம் பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும். பிற்கு தக்காளியைப் போட்டுக் கிளறி, இஞ்சி பூண்டு விழுது, புதினா மஞ்சள் தூளை சேர்க்கவும். பின்னர் அரிசி மற்றும் தேங்கய்ப் பால், தேவையான உப்பைக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி 5 நிமிடத்துக்குப் பின் இறக்கவும். குக்கர் அடங்கியதும் திறந்து, கோலா உருண்டைகளைப் போட்டு சாதம் உடையாமல் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லித் தழை போட்டு அலங்கரித்து வெள்ளரிக்காய்-வெங்காயத் தயிர் பச்சடியுடன் சூடாகப் பறிமாறினால், சுவைத்து மகிழலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோலா தேங்காய்ப்பால் பிரியாணி-செய்வது எப்படி?
» தியானம் செய்வது எப்படி?
» பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
» தியானம் செய்வது எப்படி?
» பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum