Top posting users this month
No user |
Similar topics
ஆரோக்கியமான கூந்தலுக்கு ...
Page 1 of 1
ஆரோக்கியமான கூந்தலுக்கு ...
தலை முடி ஆரோக்கியம்
மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.
வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
தலை முடி வளர்ச்சி
தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும்.
ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளைஅரைத்து சீயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து, முடி வளரும்.
தலை முடி உதிர்தல்
செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்ணீரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சீகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.
செம்பட்டை நிற முடி
செம்பட்டை நிற முடி உடையவர்கள் மருதாணி இலைகளை அரைத்துக் கலந்து காய்ச்சிய எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.
நரைமுடி
கருவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, அந்த சாறு அளவு தேங்காய் எண்ணெய்யை இத்துடன் கலந்து, காய்ச்சி (வெண்ணெய் உருக்குவது போல) வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் நரை மறையும்.
நெல்லிக்காய் சாற்றில் மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை மறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum