Top posting users this month
No user |
17ம் திகதி நல்லாட்சியை உறுதி செய்வோம்! பதுளையில் ரணில் முழக்கம்
Page 1 of 1

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை எதிர்வரும் 17ம் திகதி உறுதி செய்வது மக்களின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்கள் சந்திப்பை ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர்,
மஹிந்த ராஜபக்சவை அசைக்க முடியாதென கூறிய சந்தர்ப்பத்தில், ஹரின் பெர்ணான்டோ மிக பெரிய அர்ப்பணிப்பொன்றை செய்து ராஜபக்ச ஆட்சியை துரத்தியடித்தார்.
இந்த சேவையை செய்த பதுளை மாவட்டத்தை நான் மறக்க மாட்டேன். பதுளை மாவட்டத்தில் விசேட அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளேன்.
மஹிந்த ராஜபக்ச பதுளை மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கு முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினார். மஹிந்த ராஜபக்ச பயத்தினாலே ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அறிவித்தார்.
இதன் போது நாங்கள் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்தோம். நான் அனைவரும் ஒன்றான இணைந்தோம். பதுளையில் தான் எங்கள் வெற்றிக்கான பயணத்தை ஆரம்பித்தோம்.
நாங்கள் நல்லாட்சி ஒன்றை உருவாக்கினோம். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். எண்ணெய் விலையை குறைத்தோம். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தோம்.
சம்பளங்களை அதிகரித்தோம். நாங்கள் கேட்டது 100 நாட்கள் மாத்திரம். தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த 100 நாட்களில் நல்லாட்சியை ஏற்பட்டுள்ளது, சுதந்திரம் ஏற்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நல்லாட்சியை உறுதி செய்யுமாறு நான் மக்களிடம் கேட்டு கொள்கிறேன். 60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்குமாறும் மக்களிடம் கேட்டு கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum