Top posting users this month
No user |
Similar topics
தமிழர்களுக்கு எதிரான குறிவைப்பில் மகிந்தனார்
Page 1 of 1

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் வடக்குக்குச் செல்ல விசா தேவைப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமரானால் இலங்கையில் இருந்து வடக்குப் பிரிந்து விடும் என்பது மகிந்த ராஜபக்சவின் கருத்து.
இதில் இருந்து இனவாதத்தைத் தூண்டும் அளவில் மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரசாரம் செய்வது தெரிகிறது.
பிரிவினைவாதம் பற்றிக் கதைப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் போது, பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக அல்லது இனவாதத்தை மக்களிடையே ஏற்படுத்துவதான நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றமாகிறது.
இருந்தும் இந்தக் குற்றங்களை தமிழ் மக்கள் இழைக்கக் கூடாதேயன்றி, தென்பகுதி அரசியல் வாதிகள் இழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதுதான் இலங்கையின் நடைமுறை.
இது ஒருபுறம் இருக்க, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் வடக்குக்குச் செல்ல விசா தேவைப்படும் என்ற மகிந்த ராஜபக்சவின் முன்வைப்பு தமிழர்கள் இன்னமும் தனிநாட்டுக் கோரிக்கையுடன் உள்ளனர் என்றவாறான சிந்தனையை தென்பகுதியில் ஏற்படுத்துவதாகும்.
தமக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், விடுதலைப் போராட்டத்தை தமிழ் இளைஞர்கள் நடத்தியது உண்மை. எனினும் அந்தப் போராட்டம் மிக மோசமான வன்கொடுமை செய்யப்பட்டு மகிந்தவின் ஆட்சியில் முடிவுறுத்தப்பட்டது.
ஓர் இன அழிப்பு என்று விபரிக்கக்கூடிய அளவில் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி, அவர்களைச் சின்னாபின்னப்படுத்தி, வாழ்ந்த ஊரில்லை, இருந்த வீடில்லை என்ற கையறு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு,இப்போது மீளவும் இனவாதத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொட்டுவது எந்த வகையில் நியாயமாகும்?
யுத்தம் முடிந்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறிய மகிந்த ராஜபக்ச, போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் எந்த முயற்சியையும் மேற்கொண்டிலர்.
தமிழர்கள் இந்த நாட்டின் அநாதைகள். அவர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்ற ஒரு வக்கிரமான நிலைப்பாட்டை கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச மீளவும் ஆட்சியில் வருவதற்காக தமிழர்களைக் குற்றவாளிகளாக்க முயற்சிப்பதை இந்த நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது.
இதற்கு மேலாக, ரணிலின் அரசாங்கத்தில் வடக்குக்குச் செல்ல விசா வேண்டும் என்று கூறுகின்ற மகிந்தனார், தனது ஆட்சியில் வடபகுதித் தமிழ் மக்கள் தெற்குக்குச் செல்ல பயண அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்தவர்.
தெற்குக்குச் செல்வதற்கான பயண அனுமதியை பத்திரிகைகளில் பார்க்கவேண்டிய நிலைமையிலேயே வடக்கின் நிர்வாகம் நடத்தப்பட்டது. சிங்கள மக்கள் வடக்குக்குச் செல்ல விசா வேண்டும் என்று கவலை கொள்ளும் மகிந்தனாருக்கு வடபகுதி மக்கள் தெற்குக்குச் செல்ல பயண அனுமதி எடுத்த போது எந்தத் தாக்கமும் கவலையும் ஏற்படவில்லை.
ஆக, சிங்களவர்களுடைய நாடு இலங்கை என்ற அடிப்படையிலேயே இப்போதும் மகிந்த ராஜபக்ச தெற்கில் பிரசாரம் செய்கிறார் எனில், என்றுதான் இலங்கைத் திருநாட்டிற்கு விடிவு கிடைக்குமோ என்பது தெரியாததே.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கிற்கு வரும் எதிரணியினர் தமிழர்களுக்கு என்ன கொண்டு வருவர்?
» ஆட்சி மாறியும் தமிழர்களுக்கு விடிவில்லை: நீதிக்கான தேசிய இயக்கம்
» ஜனாதிபதி மைதிரியின் வருகையை எதிர்ப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum