Top posting users this month
No user |
Similar topics
சேமியா மட்டன் பிரியாணி
Page 1 of 1
சேமியா மட்டன் பிரியாணி
மட்டன் - அரைக் கிலோ
சேமியா - அரைக் கிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
மல்லி,புதினா - கைபிடியளவு
சிறிய எலுமிச்சை - பாதி
தேங்காய் - பாதி (பால் எடுக்கவும்)
உப்பு - தேவைக்கு
மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மட்டனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சேமியாவை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.
பின்பு மல்லி, புதினா, மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கி எல்லாம் சேர்ந்ததும் எண்ணெய் தெளிந்து வரும்.
ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைத்து திறக்கவும்.
மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய் பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு தண்ணீர். பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் பிழியவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும்.
பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.
சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.
சுவையான சேமியா மட்டன் பிரியாணி ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum