Top posting users this month
No user |
நுகர்வோர் ராஜாங்கம்
Page 1 of 1
நுகர்வோர் ராஜாங்கம்
நுகர்வோர் ராஜாங்கம்
விலைரூ.60
ஆசிரியர் : டி.ஏ.பிரபாகர்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சட்டம்
ISBN எண்: 978-81-89936-85-3
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பணம் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், எந்த நிறுவனம் அதை தயாரித்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். காலாவதியாகக் கூடிய பொருள் என்றால் அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா..? அது தரமான பொருள்தானா..? என்றெல்லாம் பார்த்துதான் அதை வாங்கவேண்டும்.
ஆனால், நம்மில் பலர் நம் தேவையின் அவசரத்தைக் கருதி ஏதோ ஒன்றை, அதுபற்றி எந்த விவரங்களையும் கேட்டறியாமல் வாங்கிவிடுகிறோம். அப்போதைய தேவையை அது பூர்த்தி செய்தாலும், பின்னர் வருகிற சிக்கல்களையும் விளைவுகளையும் அந்த அவசரகதி நம்மை மறக்கச் செய்துவிடுகிறது.
அப்படி, அவசரத்தில் ஒரு பொருளைப் பற்றி ஏதும் தெரியாமல் வாங்கிவிட்டோம்... வாங்கிய பின்னரே தெரிகிறது, கடைக்காரர் அதிக விலை வைத்து நம் தலையில் கட்டிவிட்டார், காலாவதியாகிவிட்ட பொருளை நம்மிடம் தள்ளிவிட்டார், பொருளின் மீது போடப்பட்டு இருக்கும் எடையைவிட உள் இருக்கும் சரக்கின் எடை குறைகிறது என்பதெல்லாம்! அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா?
அதற்கு என்ன தீர்வு? நுகர்வோர் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீதோ அதை விற்பனை செய்த கடையின் மீதோ நோட்டீஸ் அனுப்பி வழக்குப்பதிவு செய்யமுடியும்.
நாம் தொடுக்கிற வழக்கு சரியான காரணங்களுடன் இருப்பின் வெற்றி நமக்கானதுதான். பிறகு நுகர்வோர் நீதிமன்றம், நாம் அடைந்த நஷ்டத்துக்கான தொகையை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரும். இதனால், மீண்டும் ஒருமுறை இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை அந்த நிறுவனம் தவிர்த்துக்கொள்ளும்.
இப்படி, நுகர்வோர் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை அவள் விகடன் இதழில் நுகர்வோர் ராஜாங்கம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் எழுதிவந்தார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் இது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum