Top posting users this month
No user |
Similar topics
இமயமலையில் மறைந்து இருக்கும் மகா யோகிகளின் புனித பூமி
Page 1 of 1

இமயமலையின் பனி குவியலுக்குள் பல கோடி ரகசியங்கள் புதைந்துள்ளன. அவைகள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவையல்ல
மனிதனின் விஞ்ஞான சக்தியையும் மீறியவையாக அவைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கயான்கன்ஜ்.
கயான்கன்ஜ் என்பது இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றின் படி மிகவும் பழமையான நகரமாகும்.
இந்நகரம் இமயமலையில் மறைந்துள்ளதாகவும் இந்நகரத்தில் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
இந்த நகருக்கு சம்பலா, சங்கிரிலா, சித்தாஸ்ரம் என பலவிதமான பெயர்கள் உள்ளன. எனினும் இந்த நகரம் எங்குள்ளது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நகரத்தை பற்றிய செய்திகள் பல புராணங்களிலும், வேதங்களிலும் காணப்படுகிறது. திபெத்திய புத்த மதத்தவர்கள் இந்நகரம் மத்திய ஆசியாவில் உள்ளதாக நம்புகின்றனர்.
மேலும் உலகம் பசியின் பிடியில் தவிக்கும்போது ஷம்பலாவின் 25வது அரசர் தோன்றி இந்த உலகத்தில் புது யுகத்தை ஏற்படுத்தி பாதுகாப்பார் என்றும் திபெத்திய புத்த மதத்தினரின் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பண்டைய புத்த நூல்களில் இந்த இடத்தை அடைவதற்கு சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. எனினும் அவை புரிந்துகொள்ள முடியாதபடி உள்ளது. யோகிகளால் மட்டுமே அந்த இடத்தை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.
இன்றைய அதி நவீன சாதனங்களாலும், ரேடாராலும் கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
முக்கியமாக கயான்கன்ஜியில் வசிப்பவர்கள் மரணத்தை வென்றவர்களாக இருப்பார்கள் என்றும் பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum