Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தென்பகுதி மக்களுக்கு ஓர் அன்பு மடல்!

Go down

தென்பகுதி மக்களுக்கு ஓர் அன்பு மடல்! Empty தென்பகுதி மக்களுக்கு ஓர் அன்பு மடல்!

Post by oviya Thu Aug 06, 2015 1:51 pm

அன்புக்கினிய தென்பகுதி மக்களுக்கு வணக்கம்! நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலால் தென்பகுதி எங்கும் விழாக்கோலம் என்று அறிந்தேன். இடையிடையே வன்முறைகளும் இடம்பெறுவதாக அறியமுடிந்தது.
தேர்தல் வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண்மணி ஒருவரும் உயிரிழந்ததாக அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டேன்.

உயிரிழந்தவர்களின் குடும்ப நிலை கண்டு கவலை தாளவில்லை.இழப்புக்களால் எங்கள் தமிழ் இனம்படும் அவலம் கொஞ்சமல்ல. ஆகையால் கலகமற்ற முறையில் தேர்தல் நடந்தேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வட புலத்தின் தேர்தல் நிலைமை எப்படி என்று அறிய நீங்கள் ஆர்வமாய் இருப்பீர்கள் என்பது நன்கு தெரியும்.அரசியல் வெறுப்பால் தமிழ் மக்கள் தாம் உண்டு தங்கள் பாடுண்டு என்பதாக இருக்கின்றனர்.

எத்தனையோ அழிவுகளைச் சந்தித்த தமிழ் இனத்திற்கு அழுத கண்ணீர் மட்டுமே இப்போது சொத்தாக உள்ளது. எனினும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

பார்வையாளர் இல்லாத பாட்டுக் கச்சேரி நடக்கிறது. வடக்கின் முதல்வர் மரியாதைக்குரிய விக்னேஸ்வரன் அவர்கள் மேடையேறி தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

அவருக்கும் அரசியலில் கடும் வெறுப்பு. எனினும் எதிர்வரும் 17ம் திகதி வடக்கில் தேர்தல் நடக்கும். இலங்கையில் தேர்தல் சுமுகமாக நடந்த ஒரே மாகாணம் வடக்கு என்ற செய்தியை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தென்பகுதியில் கடும் போட்டி நடப்பது பற்றி நாங்கள் அறிந்த வண்ணம் உள்ளோம்.

ஜனாதிபதி மைத்திரி அவர்களின் மெளனம் எதற்கானது என்பது தெரியவில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்த நீங்கள், இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த துணிந்து விட்டீர்கள் என்பது நம் கணிப்பு.

தென்பகுதியில் தேர்தல் முடிவுகள் எங்ஙனம் அமையும் என்பது பற்றிய விபரங்களை அறிய ஆவலாக உள்ளோம்.

இந்த நாட்டில் அரசியல்வாதிகள் ஏற்படுத்திய இனவாதத்தை முடிவுறுத்த வேண்டுமாயின் அது தென்பகுதி மக்களால்தான் முடியும். எனினும் உங்களின் சிந்தனை மாற்றத்துக்கு இடம்தராமல் தென்பகுதி அரசியல்வாதிகள் தமிழ் இனம் பற்றி மிக மோசமான பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­, நடந்துகொண்டிருக்கும் பிரசாரத்தில் பல தடவைகள் விடுதலைப் புலிகள் பற்றி உச்சரித்து விட்டார். இது எதற்கானது?

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தன்னோடு வைத்திருந்த மகிந்தனார், மீண்டும் புலிகள் பற்றி உச்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எதுவாயினும் தென்பகுதி மக்களிடம் நிறைய மாற்றம் நடந்துள்ளது என்று அறிய முடிகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பதாகக் கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எதுவாயினும் நடைபெறப்போகும் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்பது தெரியாதாயினும் இன்னொரு இனவாதம் இந்த நாட்டில் ஏற்படாதவாறு உங்கள் வாக்குகளைப் பிரயோகியுங்கள்.

நாட்டில் அமைதி, சமாதானம் நிலவட்டும். ஊழலும் மோசடிகளும் இல்லாது போகட்டும். ஒரு அமைதியான ஆட்சி நாட்டில் அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum