Top posting users this month
No user |
Similar topics
வைகோ மீது கொலை முயற்சி வழக்கு: எந்த நேரமும் கைது செய்யப்படலாம்
Page 1 of 1

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது 12 பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செயல்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மதுக்கடை செயல்பட்டதால், மதுக்கடையை மக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது மக்கள் மீது பொலிஸார் தடியடி நடத்திய போது, மதுக்கடைக்குள் புகுந்த சிலர் கடையை சூறையாடினர்.
பொலிஸார் நடத்திய தடியடியில் வைகோ தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் பலரும் காயமடைந்தனர்.
இந்நிலையில், மதுக்கடை சூறையாடப்பட்டது, பொலிஸார் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது தொடர்பாக வைகோ, அவரது தம்பி ரவிச்சந்திரன் உட்பட 52 பேர் மீதும் பொலிஸார் கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வைகோ உள்ளிட்டோர் எந்த நேரமும் கைதாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் கலிங்கப்பட்டியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
வைகோ கூறுகையில், ஆகஸ்ட் 4ம் திகதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கானது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அறவழியில் போராட்டத்தை நடத்துகிறோம்.
தமிழகத்துக்கு ஏற்படும் பெரிய இழப்பை தடுக்க, ஒருநாள் கடையடைப்பால் ஏற்படும் நஷ்டத்தை வணிகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள எந்த டாஸ்மாக் கடையையும் செயல்படுத்த விடாதவாறு போராட்டம் நடத்துவோம்.
இதற்கு இளைஞர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல்
» சவாலாக போகும் சுனந்தா கொலை வழக்கு?
» பழிவாங்கும் நோக்கில் என்னை கைது செய்ய முயற்சி: கோத்தபாய - கைது செய்யுமாறு கோரிக்கை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum