Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் சந்தர்ப்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஏற்பட்ட மோதலே இதற்கான காரணமென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்சவை பின்பற்றுவோர்களான ஜகத் வெள்ளவத்தை, தம்ம திசாநாயக்க, விஜித நாணயக்கார, நிமால் பண்டார மற்றும் ஊடகவியலாளரான சஞ்சீவ உட்பட சிலரினால் முன்னணிக்கான விஞ்ஞாபனம் தயாரித்திருந்த சந்தர்ப்பத்தில், கோத்தபாய ராஜபக்சவின் அறிவுரைக்கமைய தயான் ஜயதிலக, நாலக கொடஹேவா, சரித ஹேரத் உட்பட சிலர் இன்னும் ஒரு விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் சிலர் விஞ்ஞாபனத்திற்கான பல கொள்கைகளை உள்ளடக்கியுள்ளனர்.
எப்படியிருப்பினும் பசில் ராஜபக்ச தரப்பினரால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவை திட்டியதோடு அவரது தேர்தல் விஞ்ஞாபன பிரதிகளை தீ வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
இதன் காரணமாகவே தான் பசில் ராஜபக்ச தனது தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்
» பசில் - கோத்தபாய இருவரும் அரசாங்கத்தை நடத்த தகுதி அற்றவர்கள்!- வாசுதேவ
» மைத்திரி– மஹிந்த இணைவார்கள்: பசில் நம்பிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum