Top posting users this month
No user |
சரியான ஆம்பளையாக இருந்தால் என்னை சுடு: வைகோ அதிரடி
Page 1 of 1

மதிமுக பொது செயலாளர் வைகோவின் ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மதிமுகவினர் அடித்து உடைத்ததால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
கண்மூடித்தனமாக மதுக்கடைகளை ஜெயலலிதா அரசு திறப்பதாக குற்றம் சாட்டிய வைகோ கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தள்ளாத வயதிலும் வைகோவின் தாயார் மாரியம்மாள், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கலிங்கப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தனது தாயாரை பார்க்க வைகோவுக்கு பொலிசாரால் அனுமதியும் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கலிங்கப்பட்டியில் மதுவிலக்கு குறித்த போராட்டத்தில் வைகோ ஈடுபட்டபோது பொலிசாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் அங்கிருந்த டாஸ்மாக் கடை ஒன்றை பொது மக்கள் அடித்து உடைத்துள்ளனர்.
இந்த கலவரத்தால் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் மக்களை விரட்ட முயன்றுள்ளனர்.
மேலும், பொலிசார் வைகோவை கைதாக கூறியதாகவும், ஆனால் வைகோ அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த போராட்டம் நடந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாமளவன் நேரில் சென்று வைகோவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பின்னர் வைகோ பேசுகையில், அமைதியாக போராட்டம் நடந்தது. அப்போது எங்கள் தொண்டர்கள் இங்கே இருந்த மதுபானக் கடையை அடித்து நொறுக்கினார்கள்.
அப்போது பொலிசாருக்கும், எங்களது தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து எறிந்தார். நாங்கள் அவரைப் பிடித்து அடித்திருக்கிறோம்.
ஆனால், அதற்குள் காவல்துறையினர் எங்கள் கட்சியினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அதேபோல், என் மீதும் 6 கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஏன் என்மீது கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டும். என்னை கொல்வதற்காகவா.
அப்படியே நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். அதுவும் எனது சொந்த ஊரில், நான் பிறந்த இந்த மன்னில் சாவது எனக்கு பெருமை தானே.
இப்போது என்னை சுடு. காக்கி சட்டை போட்ட சரியான ஆம்பளையாக இருந்தால் என்னை சுடு. நான் தனியாக வரட்டுமா? அப்போது சுடுகிறாரா? இப்போது வருகிறேன் என்று பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum