Top posting users this month
No user |
யாகூப் இறுதிச்சடங்கில் பங்கேற்ற தீவிரவாதிகள்: திரிபுரா கவர்னர் கருத்தால் சர்ச்சை
Page 1 of 1

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் இறுதிச்சடங்கில் பல தீவிரவாதிகள் பங்கேற்றதாக திரிபுரா கவர்னர் ததகட்டராய் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றவாளியான யாகூப் மேமன் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டான். அன்று இரவு மும்பையில் இறுதிச்சடங்கு நடந்தது.
அந்த சமயத்தில் திரிபுரா கவர்னர் ததகட்டராய் சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்று பதிவிட்டார்.
அதில் “யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவர் மீதும் (உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்) உளவுத்துறையினர் கண்காணிப்பை தொடர வேண்டும். ஏனெனில் அவர்களில் பலர் தீவிரவாதிகள்” என்று கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், நான் உளவுத்துறை கண்காணிப்பை தொடர வேண்டும் என்றுதான் கூறினேன்.
எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. பொதுநல விவகாரத்தை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வருவது எனது பணி.
எனவே என்னை மத சகிப்புத் தன்மையற்றவர் என்று குற்றம் சாட்ட முடியாது. கவர்னராக எனது பணி சமரசம் செய்து கொள்வதல்ல என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum