Top posting users this month
No user |
Similar topics
அப்துல் கலாம் வகுத்த பாதைக்கு உலகத் தமிழர்கள் மதிப்பளித்து அதன் வழி நடக்க வேண்டும்!
Page 1 of 1

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வகுத்த பாதைக்கு உலகத் தமிழர்கள் மதிப்பளித்து அதன் வழி நடக்க வேண்டும் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மறைந்த முன்னாள் இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள், ஒரு சாதாரண மனிதரல்ல. உலகம் உன்னதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
வறுமை, கொடுமை, பசி ஊழல் ஆகியன இல்லாத உலகம் ஒன்று உருவாக வேண்டும் என்று விரும்பியவர். மாணவர் சமூகமும், இளைஞர் சமூகமும் எதிர்கால உலகத்தை வழி நடத்தும் வகையில் உலகில மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று விரும்பியவர்.
அவ்வாறான மாற்றங்கள் நிகழ்வதற்கு தற்போதை அரசியல் தலைவர்கள் வழிவிட்டுக் கொடுக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.
அவ்வாறான கனவுகளை உலக மக்கள் அனைவரும் காண வேண்டும். அப்போதுதான் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று எண்ணியவர்.
எனவே அவர் வகுத்த பாதைக்கு உலகத் தமிழர்கள் மதிப்பளித்து அதன் வழி நடக்க வேண்டும். அதுவே தமிழைப் பேசியும் தமிழ் மரபின்படி வாழ்ந்தும் புகழுடம்பாகியுள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் செலுத்து இறுதி அஞ்சலியாகும்”
இவ்வாறு மறைந்த முன்னாள் இந்தியாவின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சிறப்புத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை. கணேசலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள மேற்படி அறிக்கையின் பிரதிகள் ஜேர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதராலயங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரங்கற் செய்தியில் மேலும் குறிப்பிட்ப்பட்டுள்ளதாவது,
மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஒரு மக்கள் ஜனாதிபதியாகவே வாழ்ந்து வந்தார். அவர் பணக்காரர்களைவிட ஏழைகளை நன்கு மதித்தார்.
அதுபோலவே வயதானவர்களைவிட இளைஞர்களையும் மாணவர்களையும் பெரிதும் நேசித்தார். இதன் காரணமாகவே தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் அவர்களுக்கு அறிவூட்டும் வகையில் உரைகளைத் தயார் செய்து அவர்கள் முன்னிலையில் வழங்கிவந்தார்.
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விருதுகளை நோக்கமாகக் கொண்டு பணியாற்றவில்லை. வெற்றிகளைப் பெற்று தான் புகழ்பெற வேண்டும் என்று எண்ணவில்லை. அதற்கு மாறாக தான் பிறந்த நாடும் தன்னை ஒரு அங்கமாகக் கொண்டுள்ள தான் சார்ந்த சமூகமும் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணினார்.
அவர் விருதுகளை நோக்கிப் பயணிக்கவில்லை. ஆனால் விருதுகளை அவரைத் தேடி வந்தன. ஆனால் அவர் பெற்ற விருதுகள் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்பதை பல சந்தர்ப்பங்;களில் தெரிவித்துள்ளார்.
ஆனால் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விருதுகள் பெறும் ஒருவராக இருந்ததிலும் பார்க்க விருதுகள் வழங்கி;க் கௌரவிக்கும் சந்தர்ப்பங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்.
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு முஸ்லிம் மகனாகவே ஆரம்பத்தில் வாழ்ந்தார். அவருடைய தந்தையார் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் இந்து பக்தர்களை தனது படகில் ஏற்றிச் சென்று பின்னர் அழைத்து வரும் ஒரு படகுச் சொந்தக்காரராக இருந்துள்ளார்.
மதவாதம் ஆங்காங்கே இந்தியாவில் தலையெடுத்து நின்றாலும், அவ்வாறான தீவிர மதவாதம் அற்ற ஒரு குடும்பத்தில் பிறந்ததனால் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தனது வாழ்வின் இறுதிவரை மதச்சார்பை ஏற்றுக்கொள்ளாத ஒரு தலைவராக வாழ்ந்தார்.
அவரது இழப்பு இந்தியாவிற்கு மட்டுமல்ல, நேர்மையான வாழ்க்கை நெறியைப் பேணும் உலகின் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு மாபெரும் இழப்பாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி
» அப்துல் கலாம் பற்றிய குறிப்புக்கள்
» இணையற்ற இந்தியத் தலைவர்கள் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
» அப்துல் கலாம் பற்றிய குறிப்புக்கள்
» இணையற்ற இந்தியத் தலைவர்கள் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum