Top posting users this month
No user |
இனப்பிரச்சினைச் சீவியத்தில் இலங்கையின் அரசியல் வாழ்வு
Page 1 of 1

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனவாதம் என்பதே முதன்மைப் பொருளாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மக்களைக் கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றி அதனூடாக நாட்டை அபிவிருத்தி செய்தல் என்பதை விடுத்து, இனவாதத்தின் ஊடாக மக்களை உசுப்பேத்தி அதனூடாக அரசியல் அதிகாரங்களை அனுபவிக்கின்ற கலாசாரம் இந்த நாட்டுக்கு மிகப்பெரிய சாபக் கேடு.
இலங்கையின் தென்பகுதியைப் பொறுத்தவரை, பேரினவாத அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் மனங்களில் தமிழர்கள் தொடர்பில் எதிர்மாறான கருத்துக்களையே விதைத்துள்ளனர்.
இந்த விதைப்பு காலத்துக்குக்காலம் நடைபெறும் தேர்தல்கள் மூலமாக வளர்க்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த இலங்கையிலும் தமிழர்களுக்கு உரிமை கொடுக்கக் கூடாது என்ற வாதங்களால் சிங்கள மக்களும், சிங்களவர்கள் எந்த உரிமையும் தரமாட்டார்கள் என்றவாறு தமிழர் பிரதேசங்களிலும் விவாதம் நடக்கின்றது.
இந்த விவாதம் 67 வருடங்களாகத் தொடர்ந்து நீடிப்பதற்குள் அரசியல்வாதிகளின் உசுப்பேத்தல் மிக உச்சமாக நடைபெறுவது உறுதியாகின்றது.
தென்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை சிங்கள அரசியல்வாதிகள் விதைக்கும் அதேநேரம், தமிழர் பிரதேசங்களில் தத்தம் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் அரசியல் வாதிகள் மக்கள் நம்பக்கூடிய வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக, இலங்கை பூராகவும் இனப்பிரச்சினையை மையமாக வைத்த அரசியலே, அரசியல்வாதிகளின் சீவியத்துக்கு உதவுகிறது. இந்நிலைமை இருக்கும் வரை இலங்கைத் திருநாட்டுக்கு எந்த விமோசனமும் கிடையாது.
அப்படியானால் இலங்கைக்கு விமோசனமே இல்லையா? என்ற கேள்வி எழும். இங்குதான் அறிவியல் பிரவாகம் என்ற விடயம் முன்எழுகிறது. அதாவது அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர் சொல்வது என்ன? முன்னர் சொன்னது என்ன? செய்தது என்ன? செய்ய இருப்பது என்ன? என்று ஆராய்வது மக்களின் முதற்கடமையாகிறது.
நேர்மையற்றவர்களை அரசியலுக்கு அனுப்பினால் நிலைமை என்னவாகும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் செய்தி தனித்து தமிழ் மக்களுக்கானதல்ல. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஆனதாகும்.
மக்கள் அரசியலில் தெளிவு பெறாதவரை அரசியல்வாதிகள் தங்களது ஏமாற்று நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டே இருப்பர். அவர்களின் நாடகங்கள் வெவ்வேறு வழிகளில் அரங்கேறினாலும் நாடகத்தின் முழுமையான நோக்கம் மக்களை ஏமாற்றுவதாகும்.
ஆக, அரசியல் சார்ந்த அறிவுப் பிரவாகத்தில் மக்களை வழிப்படுத்த நாட்டின் புத்திஜீவிகள் முன்வர வேண்டும். இது புத்திஜீவிகளின் தலையாய கடமை என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
நவீன உலகின் பயணம்; விஞ்ஞான, தகவல் தொழில்நுட்ப, புத்துருவாக்கத்தின் உச்சத்தைத் தொடுவதற்கானதாக இருக்க, இலங்கையில் இனவாதமும் மதவாதமுமே இன்னமும் பேசுபடுபொருள் என்பதாக இருந்தால் பாவம் இலங்கை மக்கள் என்று மட்டுமே மற்றைய நாட்டு மக்கள் கூறிக்கொள்வர்.
ஆகையால் இனப்பிரச்சினையில் அரசியல் சீவியம் நடத்துவதை முற்றாகத் தடுக்கக் கூடியவர்கள் இலங்கை மக்கள் மட்டுமே என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum