Top posting users this month
No user |
ஜோதிடமும் இலங்கை அரசியலும்!
Page 1 of 1
ஜோதிடமும் இலங்கை அரசியலும்!
இலங்கை மக்களை பொறுத்தவரையில் ஜோதிடம் என்பது அவர்களது வாழ்க்கையுடன் மிகவும் ஒன்றிப்போயுள்ள ஒரு விடயமாகும். விசேடமாக ஜாதகம் மற்றும் மங்கள நிகழ்வுகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற ஒரு விடயமாக ஜோதிடம் காணப்படுகின்றது.
ஒரு குழந்தை பிறந்தது முதல் அனைத்து விடயங்களிலும், ஜோதிடத்தின் படியே பின்பற்றப்படுகின்றன.
இதேவேளை சமீப காலமாக அரசியலிலும் ஜோதிடத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றமையினை காணலாம். பல ஜோதிடர்கள் புகழ் பெறுவதற்கும், அவமானப்படுவதற்கும் இவ் அரசியல் ரீதியான ஜோதிடங்கள் காரணமாகின்றன.
ஜோதிடத்தை வழமையாக பயன்படுத்துவது போலத்தான், அரசியலிலும் பயன்படுத்தப்படுகின்றது.
அரசியலுக்காக பிரத்தியேகமாக ஜோதிடம் பயன்படுத்தப்படுவதில்லை. முன்னைய அரசியலில் ஜோதிடம் முக்கியமானதாக பார்க்கப்படவே இல்லை. ஆனால் தற்போதைய காலத்தில் ஜோதிடத்திற்கும், ஜோதிடர்களின் கருத்துக்களுக்கும் அதிகளவான முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது.
அரசியலுக்கும், ஜோதிடத்திற்கும் இடையிலான தொடர்பு
முன்னாள் ஜனாதிபதியை பொருத்தவரையில் அவர் ஜோதிடத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். குறிப்பாக சுமனதாஸ அபேகுணவர்தன அரச ஜோதிடராகவே அறியப்பட்டார்.
அதேவேளை பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் பிரதம மந்திரியாக செயற்பட்ட டி.எஸ் சேனாநாயக்கவின் பதவியினை கூட ஒரு ஜோதிடரால் கணித்து கூறப்பட்ட ஒரு நிகழ்வு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
டி. எஸ் சேனாநாயக்காவினை தொடர்ந்து பதவி வகித்த டட்லி சேனாநாயக்காவின் ஆட்சிக்கும் ஜோதிடம் மிகவும் இன்றியமையாததாக இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக பார்க்கின்ற பொழுது மகிந்த ராஜபக்ஸ மட்டும் இல்லை. இலங்கை அரசியல்வாதிகளில் பலர் ஜோதிடத்தை நம்பியே அரசியல் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
தனது அரசியல் வரலாறு எப்படி இருக்கும் என்று ஜோதிடத்தை வைத்து தீர்மானித்தமையினை, இலத்திரனியல் ஊடகங்கள் தேவையற்ற வகையில் விமர்சனம் செய்ததாக சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எண் ஜோதிடர் பந்து அபேயசுந்தரவின் கருத்துப்படி கடந்த காலங்களில், பாராளுமன்ற தேர்தல் நோக்கங்களுக்காக ஜோதிடம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார் . அது பல தரவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புக்கள்
மற்றைய தொழிலில் இருப்பவர்களை விட அரசியல்வாதிகளே அதிகளவு ஜோதிடத்தினை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
ஜோதிடத்தினை ஏற்றுக்கொள்ளுபவர்களின் எதிர்பார்ப்புகள் நபருக்கு நபர் வேறுபடுவதாக சுமனதாச தெரிவிக்கின்றார். இதனை மகிந்த ராஜபக்ஸவை அடிப்படையாக வைத்தே தெரிவித்துள்ளார். மகிந்தவை போல அவரது குடும்பமும் ஜோதிடத்தினை நம்புகிறார்கள். ஆகவே இது தலைமுறை அடிப்படையிலே இது பின்பற்றபடுகிறது.
ஜோதிடர் சம்பத் கூறுகையில், அரசியல்வாதிகள் உட்பட அதிகமானவர்கள் ஓழுங்கான காரணங்களுக்காக ஜோதிடத்தினை பயன்படுத்துவதில்லை.
மேலும் அரசியல்வாதிகளை பற்றி கருத்து தெரிவிக்கையில், அரசியலில் தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும், எனப்படும் சுயநல நோக்கத்திற்க்காகவே ஜோதிடத்தினை பயன்படுத்துகிறார்கள்.
அதிகப்படியான ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசியலில் தேர்தலில் திகதியினை முடிவுபண்ணுதல், வேட்புமனு தாக்கல் திகதியினை முடிவு பண்ணல் போன்ற சின்ன, சின்ன காரணங்களுக்காக ஜோதிடம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர். அதேளை ஜோதிடம் குறிப்பிட்ட தாக்கத்தினை மட்டுமே ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
ஜோதிடத்தினை மையமாக வைத்து ஓரளவு நாட்டின் தன்மையை விளக்க முடியும். அதனால்தான் மக்கள் ஜோதிடத்தினை விவாதம் செய்வதில்லை.
இலங்கை பிரித்தானியாவின் ஆட்சிக்கு உள்வாங்கப்பட்ட விடயங்கள் கூட ஜாதகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் இலங்கையின் அரசியல் நிலவரங்கள் ஜோதிடத்தின் ஊடாகவே கணிக்கப்படுவதாக ஜோதிட ஆசிரியர் சுனில் கல்பொட தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பார்க்கின்றபொழுது ஜோதிடத்தின் படி இலங்கை ஆட்சி மீது சில தாக்கங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
தவறான கணிப்புக்கள்
துல்லியமாக ஜோதிடத்தினை கணித்தவர்களின் சில கணிப்புக்கள் தவறாக முடிகின்ற நிகழ்வுகளும் நடக்கின்றன. மகிந்தவின் 2005 மற்றும் 2010 ஆண்டு வெற்றிகளை ஏற்கனவே கல்பொட என்பர் தமது ஜோதிடத்தின் மூலம் கணித்திருந்தார்.
அதனைப்போல 2015 ம் ஆண்டு அவர் தோல்வி அடைவார் என எதிர்வு கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
இருப்பினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமனதாஸவின் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் கணித்துக்கூறியமையானது அவரது ஜோதிட வரலாற்றில் பாரிய அவமதிப்பினை ஏற்படுத்தியுள்ளது, என்பது குறிப்பிடதக்கது.
அத்தகைய தவறான கணிப்பானது மகிந்தவின் வரலாற்றை மாற்றியதுடன் ஜோதிடத்தின் மரியாதையினையும் கெடுத்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடதக்கது.
ஜோதிடர் கல்பெகேவை பொறுத்தவரை இவர் வழங்கிய சில தவறான கணிப்புகளும் , அரசியல் கணிப்புகளுக்கு இவர் வழங்காத முக்கியத்துவம் என்பன இவருக்கு ஜோதிடத்தில் பற்றாக்குறையாக இருந்தது.
இவர் ஜோதிடத்தினை பயன்படுத்தி வாக்காளர்களை தவறாக வழிநடத்துவது ஒழுக்கமற்ற செயல் என எடுத்தியம்பியுள்ளார்.
ஜோதிடம் நடத்தைகள் மற்றும் விதிகள் போன்றவற்றை பதிவு செய்வதால் இது மெமரி சிப்பை போன்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலை தவறாக கணித்ததன் விளைவாக ஜோதிடத்தை பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகின்றது.
அபேயசுந்தர என்பர் கூறும்பொழுது ஜோதிடத்தினை பயன்படுத்தி யாருக்கும் வெற்றியையோ, தோல்வியினையோ தரமுடியாது.
உதாரணமாக, மருத்துவ துறையானது எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் இன்னும் பல இடங்களில், மக்கள் நோயில் இருந்து குணம் அடைய முடியாமல் இறந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
மருத்துவ உலகில் அவ்வப்போது தவறாக கொடுக்கப்படுகின்ற மாத்திரைகளால் நோயாளிகள் கொல்லப்படுகின்றார்கள். அதனால் மருத்துவ துறை முழுவதும் தவறு என குறிப்பிட முடியாது. அதனைப்போல சில கணிப்புகள் தவறு என்பதற்காக, ஜோதிடத்தினை முழுவதும் தவறு என குறிப்பிட முடியாது.
ஜோதிட திறமை என்பது எல்லோருக்கும் உடன் பிறந்த ஒரு விடயம் இல்லை. ஆகவே தேர்தல் பற்றிய தவறான கணிப்பிற்கு ஒப்பீட்டு அடிப்படையில் வேட்பாளர்களின் ஜாதகம் வேறுபடுவது ஒரு காரணமாக இருக்கலாம்.
அதேவேளை பொதுவேட்பாளர் யார் என்று ஆரம்பத்தில் சரியாக தெரியாததன் விளைவாகவே, சரியாக மகிந்தவின் வெற்றியினை அனுமானிக்க முடியாமல் இருந்ததாக சுமனதாச தெரிவித்துள்ளார். அதேவேளை மகிந்த அரசியல் நோக்கங்களுக்காக ஜோதிடத்தினை பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்ததனை இவர் நிராகரித்துள்ளார்.
ஜோதிடர் அபேயசுந்தர கூறும் பொழுது, கிரக நிலைகளில் உள்ள தீயவிளைவுகள் ஜாதகத்தில் தாக்கம் செலுத்துவதன் காரணமாக மக்கள் பாதிப்படைவதற்கு காரணமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கல்பகே கூறும்பொழுது, ஜோதிடத்தினை அதிகம் நம்புவதானது மிகவும் பொருத்தமற்றது எனவும், அதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் மிக சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளார்.
தவறான சந்தர்பத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற போது சாந்தி கர்மா அவர்களை காப்பாற்றும். ஆனால் முடிவுகள் அவர்களது நடத்தையினை மையமாக வைத்தே தீர்மானம் செய்யப்படும்.
அரசியல்வாதிகளின் நடத்தைகளுக்கு சாந்தி கர்மா மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிருஸ்ண மூர்த்தியும், அரசியலும்
ஜி. எச். டபல்யு சில்வா எனும் ஜோதிடர் கிருண்மூர்த்தியின் ஜோதிட முறைமைகள் பற்றி கூறும்பொழுது அது மிகவும் சிக்கலானது என கூறியுள்ளார்.
மேலும் கிருஸ்ணமூர்த்தியுடைய பாவா பட்டியல் மிகவும் சிக்கலானது. அரசியல்வாதிகளும் மிக குறைந்த அளவே பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிருஸ்ண மூர்த்தியின் ஜாதக அமைப்பில், இந்திக தோட்டாவத்த பயன்படுத்திய கணிப்பே மைத்திரியின் வெற்றியினை தீர்மானித்தது.
இவ்வாறாக எந்த பிரச்சினைக்குரிய தீர்வுகளையும் கிருஸ்ணமூர்த்தியின் ஜாதக அமைப்பில் கண்டறியலாம். ஆனால் அரசியலை பொருத்தவரையில் பெரிதாக பிரபலம் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.
ஜோதிட கணிப்புகளும் 2015 பொது தேர்தலும்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எல்லா தேர்தல் நடவடிக்கைகளும் ஜோதிடத்தின் அடிப்படையிலே தீர்மானிக்கப்பட்டதாகவும். ஆனால் இப் பொதுதேர்தலில் எந்தவொரு நடவடிக்கையும் ஜோதிடத்தினால் தீர்மானிக்கப்படவில்லை என கல்பொட தெரிவித்துள்ளார்.
மேலும், இப் பொது தேர்தலில் ரணில் விக்கரமசிங்க பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி, முன்னைய தேர்தல்களை விட அதிகளவான வாக்குகளை இம்முறை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேளை இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வீதம் இப்பொது தேர்தலில் மிகவும் குறையும் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை நான்கு முக்கியமான மற்றும் மூத்த அரசியல்வாதிகள் தமது ஆசனங்களை இழக்க நேரிடும் எனவும் கல்பொட தெரிவித்துள்ளார்.
அதேவேளை அபேயசுந்தர என்பவர், யார் பிரதமராக தெரிவாகினாலும் நல்லாட்சிக்கு ஆதரவாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுடன் சுமனதாஸ தேர்தல் முடிவுகள் வெளியிடுவதனை கைவிட்டார். ஆனால் கோட்பாடுகளாக ஜோதிடத்தினை கணித்து கூறமுடியாது என கல்பொட தெரிவித்துள்ளார்.
சுமனதாஸ கூறுகையில் எனக்கு என் தொழிலில் மரியாதை இருப்பதாகவும், எனக்கு அதிகளவான வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அதனால் அரசியல் ஜோதிட கணிப்புக்களை விடுத்து, வழமையான எனது கணிப்புக்களை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 20 வருடங்களாக தெற்கு ஆசியாவில் சரியான கணிப்புக்களை வழங்கி வருவதாகவும் சுமனதாஸ தெரிவித்துள்ளார்.
ஜாதகம் அவரவர் நடத்தையின் பிரகாரமே தீர்மானிக்கப்படும். அதில் நட்சத்திரங்களில் செல்வாக்கு இருப்பதனால் நபருக்கு நபர் வேறுபடும். ஆனால் நல்ல எண்ணம் இருந்தால் கிரகங்கள் எங்கிருந்தாலும் வெற்றி பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum