Top posting users this month
No user |
Similar topics
உடனடி அடை
Page 1 of 1
உடனடி அடை
அடை உப்புமா மாவு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
பச்சை மிளகாய் - மூன்று
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மாவில் உப்பு சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
நெய் மற்றும் எண்ணெய்யை கலந்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மாவில் பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு சிறிய கரண்டி மாவை ஊற்றி தோசை போல் பரப்பவும்.
சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum