Top posting users this month
No user |
Similar topics
எங்களது அவல வாழ்க்கையை எப்போது புரிந்துகொள்ள போகின்றார்கள்? தலங்கந்தை மக்கள் கவலை
Page 1 of 1

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி என கூறப்படும் மலையக மக்கள், 200 வருடங்களுக்கு முன்பு மலையக பகுதிகளில் குடியேறி காடு, வனம் என அலைந்து திரிந்து தேயிலை மற்றும் கோப்பி பயிர்செய்கைகளை மேற்கொண்டு இலங்கை பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.
ஆனால், இம்மக்களின் வாழ்க்கை தரத்தை பார்க்கின்ற பொழுது ஏனைய சமூகத்தை விட பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, குடியிருப்பு, காணி உரிமை என அடிப்படை வசதிகளும் கூட அரசியல்வாதிகளால் பெற்று தரமுடியாத அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வது இம்மக்களின் சாபமா அல்லது அரசியல்வாதிகளின் உண்மையான செயல்பாடு இன்மையா என ஒருமுறை திருப்பி பார்க்க தோன்றுகின்றது.
இம்மக்கள் கல்வி அறிவு இல்லை என பலரால் பட்டம் சூட்டப்பட்டாலும் இம்மக்களின் வளர்ச்சியும் உழைப்பும் கல்வி தரமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது.
ஆனால் இன்னும் சில தோட்டங்களில் மக்கள் வாழ கூடிய அடிப்படை வசதியும் கூட இல்லாமல் வாழ்க்கை தொடர்வதோடு, காற்று, மழை பாராமல் உழைத்து இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியாத அளவில 8 அடி கம்பிராக்களில் 3 அல்லது 4 குடும்பங்கள் ஒரே அறையில் முடங்குகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலைமையை தான் லிந்துலை தலங்கந்தை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
எங்களது அவலவாழ்க்கையை எப்போது புரிந்துக்கொள்ள போகின்றார்களோ என புலம்பி தவிக்கின்றனர் இம்மக்கள்.
இத்தோட்டம் லிந்துலை நகரத்திலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 80 இற்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய லயன் அறைகளே அதிகமாக உள்ளது.
கூரைத்தகரம் மாற்றப்படாத நிலையில் கூரையின் மேற்பகுதியில் கம்பு தடிகள் கற்கள் மற்றும் டயர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் கறுப்பு றபர் சீற் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறுயிருந்தாலும் மலசல கூடம் இல்லாமல் பல இடர்களை சந்திப்பதாக இம்மக்கள் நொந்து போயுள்ளனர்.
இது தொடர்பாக சிலர் எமக்கு கருத்து தெரிவிக்கையில்,
லோகேஸ்வரி- நாங்கள் வாழும் குடியிருப்பை பற்றி கூறவே வெட்கமாகவே உள்ளது கூரை தகரம் மாற்றப்படாமையால் தற்போது கூரை தகரம் சல்லடைபோல் காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டுதான் மழை நீரை அப்புறப்படுத்துகின்றோம். அத்தோடு தகரத்தின் மேல் கறுப்பு றபர் சீட் போட்டுள்ளோம்.
தொழிலுக்கு சென்று வீடுவந்து நிம்மதியாக உறங்க முடியாமல் தவிக்கின்றோம். தகரத்தினை மாற்றி தருமாறு தோட்ட அதிகாரியிடம் பல முறை கேட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெறிவிக்கின்றார்.
இராஜநாயகம்
எங்களுடைய தோட்டத்தில் பாரிய பிரச்சினை என்றால் அது மலசல கூடம் தான் தோட்ட நிர்வாகம் இந்தா கட்டிதாறோம். அந்தா கட்டி தாறோம் என கூறுகின்றார்கள்.
ஆனால் எதுவும் நடந்த பாடியில்லை. லயத்தில் இருபக்கங்களிளும் வீடுகள் உள்ளதால் மலசல கூடம் கட்டிக்கொள்ள முடியவில்லை. வாக்கு கேட்டுவந்தவர்களும் தலையிட்டதாக இல்லை தற்போது இதனால் இரவு வேலைகளில் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக இவர் தெரிவிக்கின்றார்.
லெட்சுமி
நாங்கள் தான் கஸ்டப்பட்டோம். எங்களுடைய பிள்ளைகள் ஒருநாளும் இவ்வாறு கஸ்டப்படகூடாது. லயத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் எங்களின் துயரம் புரியும் மற்றவர்களுக்கு எங்க புரியபோகின்றது.
தோட்டத்துக்கு வரும் அதிகாரிகளிடம் கையேந்தி கேட்டுகேட்டு வெறுத்து போய்விட்டது. அத்தோடு பாதையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
6 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். தேர்தல் காலங்களில் பல கோரிக்கைளை கொடுத்தோம்.
அப்போது வந்தவர்கள் நாங்கள் இருக்கின்றோமா என்பதனையும் மறந்துவிட்டார்கள். எனவே எங்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து தாருங்கள என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எமக்கு எப்போது விடிவு:வன்னிவிழாங்குளம் பாலைப்பாணி மக்கள் கேள்வி
» இந்தியா வந்த எங்களது மகளே வருக: வழி தவறி பாகிஸ்தான் சென்ற இளம்பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
» கவலை தொலைய மந்திரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum