Top posting users this month
No user |
திருகோணமலையில் 49 நிறுவனங்களுக்கு நிதிப்பங்கீடு
Page 1 of 1

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 49 நிறுவனங்களுக்கு பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நிதியின் கீழ் 5.7 மில்லியன் தொகை நிதியானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தே கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி வழங்கி வைத்தார்.
இவ் ஒதுக்கீட்டின் மூலமாக மாவட்டத்திலுள்ள 30 பாடசாலைகளுக்கும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நிதியானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள், காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்கள் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமாக தெரிவு செய்யப்பட்ட 60 நபர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான திட்டத்தினையும் விரைவில் அமுலாக்குவற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு உரை ஆற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
மூதூர் சீதனவெளி பகுதியில் மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டிலான 30 மில்லியன் செலவிலும் தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றினை 30 மில்லி ரூபா செலவிலும் மொத்தமாக 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன்மூலமாக மாகாணத்திலுள்ள 100க்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட வலயக் கல்விப்பணிப்பாளர் என்.விஜேந்திரன் மற்றும் கல்லூரி அதிபர்கள் உட்பட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum